டோக்கியோ :ஜப்பானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளிவில் 6 புள்ளி 4 ஆக பதிவானது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள Kyushu, Shikoku பகுதிகளில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்றும், சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் ஜப்பான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக ஜப்பான் அணுமின் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட சிறிய சேதங்களில் சிக்கி 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், மற்ற இடங்களில் தண்ணீர் குழாய்கள் சேதம் மற்றும் சிறு சிறு நிலச்சரிவு உள்ளிட்ட சேதங்கள் பதிவானதாக ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் மிக மோசமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் புகுஷிமா அணு உலை உருகி பெரும் சேதம் ஏற்படுத்தியது. இது போன்ற மிக மோசமான நிகழ்வை ஜப்பான் அதன் வரலாற்றில் மீண்டும் கண்டு இருக்க முடியாது என்ற அளவில் சேத விளைவுகள் காணப்பட்டன.
இதையும் படிங்க :கூகுள் ஊழியர்கள் 28 பேர் அதிரடி பணி நீக்கம்! இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை கண்டித்ததால் நடவடிக்கை! - Google Layoff