பதங்: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலரை காணவில்லை. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக் மாவட்டத்தில் நேற்று கிராம தொழிலாளர்கள் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சேற்றில் புதைந்தனர். சுமார் 25 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும், காயங்களுடன் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் பேரிடர் தணிப்பு முகமை அலுவலக தலைவர் இர்வான் எஃபெண்டி தெரிவித்துள்ளார்.
பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் இல்ஹாம் வஹாப் கூறுகையில், "நகரி சுங்கை அபு கிராமம் அருகே, மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, மின்தடை மற்றும் தொலைத்தொடர்பு இல்லாமை போன்றவை பெரும் பின்னடைவாக உள்ளது. அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 மணி நேரம் நடந்தால் மட்டுமே சுரங்கப் பகுதியை அடைய முடியும்" என்றார்.
இந்தோனேசியாவில் சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் சாதாரணமானது. கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில் உழைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு மெதுவான வாழ்வாதாரத்தை வழங்குகிறது. படுகாயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் அபாயத்தை இவை கொண்டிருந்தாலும் அங்குள்ள சூழ்நிலையில் உழைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு இத்தகைய சட்டவிரோத சுரங்கங்கள் தான் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.