தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

குளிர்சாதன பெட்டியில் வைக்கும் தக்காளி நீண்ட நாள் கெட்டுப்போகமல் இருக்க: இதை ட்ரை பண்ணுங்க.! - How to store tomato for long days

சில நேரங்களில் தங்கத்தின் விலைபோல் உயரும் தக்காளியைக் குளிர்சாதனப் பெட்டியில் நீண்ட நாள் அதன் தன்மை மாறாமல் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்யலாம்?

தக்காளி கோப்புப்படம்
தக்காளி கோப்புப்படம் (Credits: Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 1:52 PM IST

சென்னை:சைவும் என்றாலும் சரி அசைவம் என்றாலும் சரி சுவையான உணவைத் தயாரிக்கத் தக்காளியின் பங்கு மிக முக்கியமானது. தக்காளி ரசம், தக்காளி குழம்பு, தக்காளி தொக்கு, தக்காளி சட்சி, தக்காளி சாஸ் எனத் தக்காளியை வைத்து மட்டுமே தயாரிக்கப்படும் உணவுகள் பல உள்ளன.

மேலும், சிக்கன், மட்டன் உள்ளிட்ட அனைத்து அசைவ குழம்புகள் மட்டும் வறுவல்கள், சாம்பார் உள்ளிட்ட சைவ குழம்புகள் பொரியல்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தக்காளியின் பங்கு மிக முக்கியம். தக்காளி சேர்த்தால் மட்டுமே அந்த உணவுக்கான முழுமையான சுவை கிடைக்கும் என்றே கூறலாம்.

இந்நிலையில் சில நேரங்களில் தக்காளி விலை மிக மலிவாகவும் இருக்கும் சில நேரங்களில் தங்கத்தின் விலைபோல் ஏற்ற இறக்கத்துடனும் காணப்படும். இந்த சூழலில் தக்காளி விலை உயர்வின்போது மக்கள் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி? என்ற ஆலோசனைக்குச் சென்று விடுகிறார்கள். இந்த சூழலில் தக்காளி குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது அதை வாங்கி பக்குவப்படுத்தி நீண்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

இதையும் படிங்க:ஆஃப் பாயில் சாப்பிட்டால் ஆபத்து! பரவும் பறவைக் காய்ச்சலால் எச்சரிக்கை - Bird Flu Health Advisory

தக்காளியைக் கெட்டுப்போகாமல் சேமிப்பது எப்படி:

  • தக்காளியை நீங்கள் கிலோ கணக்கில் வாங்கும்போது பழுத்த பழம் மற்றும் அளவாகப் பழுத்த பழம் என மொத்தமாகத்தான் கிடைக்கும்
  • அதை இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பழுத்த பழத்தை உங்கள் தற்காலிக தேவைக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பழுத்த பழத்தைச் சேமித்தால் அது கெட்டுப்போவதுடன் அதனுடன் வைக்கப்பட்டிருக்கும் மற்ற பழங்களையும் கெட்டுப்போகச் செய்துவிடும்.
  • அளவாகப் பழுத்த பழத்தை மஞ்சள் மற்றும் உப்பு அல்லது பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் போட்டு சுத்தமாகக் கழுவிக்கொள்ளுங்கள். இது பழத்தில் அடிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லிகள் அகற்றப்பட்டு சுத்தமான முறையில் சேமிக்க உதவும்
  • பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஈரம் இல்லாத அளவுக்கு காட்டன் துணியால் துடைத்துக்கொள்ளுங்கள். ஈரம் இருந்தால் பழம் கெட்டுப்போக அதுவே காரணமாக அமைந்துவிடும்.
  • தொடர்ந்து கொஞ்சம் எண்ணெய் எடுத்து பழத்தின் காம்பு மற்றும் முழு பகுதியிலும் தடவி வையுங்கள்
  • பிறகு ஒரு கண்டெய்னரில் தக்காளியை தலைகீழாக அடுக்கி அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வையுங்கள் இதுதான் மிக முக்கியம்.

இப்படிச் செய்யும்போது தக்காளி நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமலும், அதன் தன்மை மாறாமலும் அப்படியே இருக்கும். உங்களுக்குத் தக்காளி தேவை என்று வரும்போது ஒரு நாளுக்கு முன்னதாக தேவைக்கு ஏற்ற தக்காளியை மட்டும் எடுத்து வெளியே வைத்துப் பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க:முடி வறட்சிக்கு முழு தீர்வு! அழகான, மிருதுவான கூந்தல் வேண்டுமா? - Home Remedies For Dry Hair

ABOUT THE AUTHOR

...view details