ஹைதராபாத்:உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த புற்றுநோய் எதனால் வருகிறது? மார்பக புற்றுநோய் பரவுமா? யாருக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது? போன்ற நமது கேள்விகளுக்கு ஆய்வு சொல்லும் பதில்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
எடை அதிகரிப்பு: 2018ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புற்றுநோய் தடுப்பு ஆய்வின் படி, அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறது. அதுமட்டுமல்லாது, இதை NIHன் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்உறுதிசெய்துள்ளது.
மது அருந்துதல்: மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பது மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
உடல் உழைப்பு இல்லாமை:பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு. முறையற்ற இரத்த ஓட்டம் காரணமாக மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
ஹார்மோன் பிரச்சனை: பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது, பல ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.
தாய்ப்பால் கொடுக்காததால்: தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. குழந்தை இல்லாத பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.