வெற்றிலைகள் இந்திய கலாச்சாரத்தில், அதிலும் குறிப்பாக நமது தமிழக கலாச்சாரத்தில் ஆன்மிக பூஜைகள் முதல் இறப்பு வரை அனைத்திலும் முதன்மையாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தது.
அப்படி, அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு போடும் இந்த வெற்றிலைகளில் நிறைந்திருக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்..
- சிலருக்கு தினமும் வெற்றிலை சாப்பிடும் பழக்கம் இருக்கும். இப்படி, தினமும் சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும் உடனே நீங்குகிறது. இரண்டு கிளாஸ் தண்ணீரில் சில வெற்றிலைகளை சேர்த்து, ஒரு கிளாஸ் வரும் வரை கொதிக்க வைத்து குடித்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் குணமாகும்.
- வாய் துர்நாற்றத்தை வெற்றிலை நீக்குகிறது. மேலும், ஈறுகளில் இருந்து வரும் இரத்தக் கசிவை தடுத்து பற்களை பலப்படுத்தும் குணம் வெற்றிலைக்கு உணடு.
- வெற்றிலை சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. இவற்றில் உள்ள கிருமி நாசினிகள் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இதையும் படிங்க:வெற்றிலை பாக்குப் போடுவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
- சில நேரங்களில், பாலூட்டும் தாய்மார்களின் மார்பகங்களில் பால் உறைந்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. அந்த நேரத்தில் வெற்றிலையை சிறிது சூடாக்கி மார்பில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
- வெற்றிலை காயங்களை ஆற்றவும் பயன்படுகிறது. வெற்றிலைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை காயத்தின் மீது தடவி, மற்றொரு வெற்றிலையை அதன் மீது வைத்து கட்டு போட வேண்டும். இப்படி செய்தால் இரண்டு மூன்று நாட்களில் காயம் குணமாகும்.
- வெற்றிலையை மென்று சாறு விழுங்குவதால் செரிமான பிரச்சனைகள் குறையும். அதனால் தான் விஷேச வீடுகளில் சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு போடுகின்றனர்.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெற்றிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் வெற்றிலைச் சாறு குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
- முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிது எண்ணெய் தடவி வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- வெற்றிலையில் உள்ள இயற்கையான சில கலவைகள் நமது உடலிலும் மனதையும் அமைதி படுத்துகிறது.