எள், நிலக்கடலை, தேங்காய் போலவே அளி விதை என்பது எண்ணெய் தன்மை கொண்டது. தாவிர வகைகளில் அதிகப்படியான ஒமேகா 3 அமிலம் மற்றும் நார்ச்சத்தை கொண்டது இந்த ஆளி விதைகள் தான்.
ஆளி விதையில் உள்ள சத்துக்கள்:
- ஒமோகா 3
- நார்ச்சத்து
- கார்போஹைட்ரேட்
- புரதம்
- கால்சியம்
- மெக்னீசியம்
- பாஸ்பரஸ்
- பொட்டசியம்
- ஃபோலேட்
ஆளி விதை பயன்கள்:
1. உடல் எடையை குறைக்கிறது: கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் (Soluble and Insoluble Fiber) என இரண்டையும் ஆளி விதைகள் கொண்டுள்ளது. இதை உண்பதால், வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதோடு பசி உணர்வை தடுக்கிறது. இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜனான லிக்னான்ஸ் (Lignans) எனும் ஆன்டியாக்ஸிடன்ஸ் உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கிறது.
2. இதய அடைப்பை தடுக்கும்: ஆளி விதைகளில், ஒமோகா 3 நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் இருக்கிறது. மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் சம அளவு சத்துக்களை ஆளி விதைகள் கொண்டுள்ளது. ஒமேகா 3, இதய குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. தினசரி ஆளி விதைகளை உட்கொள்வதால் இருதயம் சார்ந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.
3. செரிமானம் சீராகும்: இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினசரி ஆளி விதைகளை உட்கொள்வதால், மலக்குடலில் உள்ள மலத்தை மிருதுவாக்கி வெளியேற்றுகிறது. இந்த விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.
4. கேன்சர் வராமல் தடுக்கும்:இதில் உள்ள ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகளை அழிப்பதோடு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. மேலும், இதில் உள்ள லிக்னான்ஸ், பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சீராக வைக்க உதவுகிறது. பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என பல்வேறு ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டால் ஆண்களுக்கு அந்த பிரச்சனை வராது..!