தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

ரேஷன் அரிசி சர்க்கரை அளவை குறைக்கிறதா? உண்மை என்ன? - Does ration rice reduce sugar level

TN Ration Rice Benefits: ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி சர்க்கரை அளவை குறைக்கிறது, உடல் எடையை அதிகரிக்காது என பல கருத்துகள் பரவுகின்றன. இவை அனைத்தும் உண்மை தானா? தெரிந்து கொள்ளலாம் இந்த செய்தி தொகுப்பில்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - TNAU WEBSITE)

By ETV Bharat Health Team

Published : Sep 24, 2024, 1:45 PM IST

ரேஷன் அரிசி எந்த வகையை சேர்ந்தது? :ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தனிவகையைச் சார்ந்தது கிடையாது. பொதுவாக, தினசரி மக்கள் பயன்படுத்தக்கூடிய அரிசிகள் தான் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுக்கப்புத் துறையால் நேரடியாக அறுவடைக் காலங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகளாகக் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த நெல்மணிகள் மில்களில் இருந்து புழுங்கள் அரிசியாகக் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சூழ்நிலைகள் மட்டும் இருப்புக்கு ஏற்ப பல வகையான அரிசி வகைகளும் கொடுக்கப்படுகிறது.

புழுங்கல் அரிசி என்றால்?:நெல்மணிகளை ஊறவைத்து அதன் பின்னர் வேகவைக்கப்பட்ட அரிசி தான் புழுங்கல் அரிசி என்றழைக்கபடுகிறது. இப்படிச் செய்வதன் மூலம், நெல்மணிகளில் இருக்கும் தவுடுகளில் உள்ள சத்துக்கள் அரிசிக்குச் செல்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த அரிசிகள் உலர வைக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. பெரும்பாலும், தமிழ்நாட்டில் புழுங்கல் அரிசி தான் பயன்படுத்தப்படுகிறது.

கோப்புப்படம் (credit - TNPDS WEBSITE)

எவ்வளவு பழமையானது?:தற்போது நமக்குக் கிடைக்கும் ரேஷன் அரிசிகள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழமையானதாக இருக்கிறது. காரணம், பஞ்சம்,வெள்ளம், அறுவடை இல்லாத காலங்களில் மக்களுக்கு உதவுவதற்காகச் சேகரித்து வைக்கப்படுகிறது. பொதுவாக, நாம் கடைகளில் வாங்கும் அரிசி அதிகபட்சமாக ஒரு வருடம் பழமையானதாக இருக்கிறது.

சர்க்கரை அளவை குறைக்கிறதா?: ரேஷன் அரிசிகள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழமையாக இருப்பதால் கடினமாக மாறிவிடுகிறது. இதனால், குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள முடிகிறது. பசியையும் தக்கவைக்கிறது. இது மறைமுகமாக உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோயைக் குறைக்க உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த அரிசியில் சத்துக்கள் தக்க வைக்கப்படுவதால் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்தை வழங்குகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details