குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இது ஒரு சுத்தமற்ற, சுகாதாரமற்ற செயலாக நமக்கு தோன்றினாலும், உண்மையில் இப்படி செய்தால் பல நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்ன நன்மை இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.. ஒரு சர்வதேச அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் 58% மக்கள் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல, பிரிட்டனில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் குளியலறையில் சிறுநீர் கழிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
தண்ணீர் சேமிப்பு?: குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது தண்ணீரை மிச்சப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம், சிறுநீர் கழித்த பின் செய்யப்படும் ஒரு ஃப்ளஷிற்கு (Flush) தற்போது 3 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே தேவைப்படுகிறது என்று கூறுகிறது. அதே பழையகால கழிப்பறையாக இருந்தால் ஒரு ஃப்ளஷிற்கு குறைந்தது 10 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் 350 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே, குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால் ஃப்ளஷ் செய்வது தவிர்க்கப்பட்டு தண்ணீர் மிச்சப்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்கின்றனர்.
குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று 2018ம் ஆண்டு Journal of Environmental Health இதழில் வெளியான "The Hygiene of Urination" என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் நிகேத் சோன்பால் வலியுறுத்துகிறார். சிறுநீர்ப்பை தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது, மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
குறிப்பாக, காலில் காயம் உள்ளபவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது என்றும் அதனால்தான் பொது கழிப்பறைகளை விட தனிப்பட்ட குளியலறைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். குளியலறையில் சிறுநீர் கழித்தால் அந்த பகுதியை சோப் அல்லது க்ளீனிங் லிக்விட் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுநீர் உடம்பில் பட்டால் தொற்று குணமாகுமா? : உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், கால்களில் சிறுநீர் படுவது தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சினைகளை குணப்படுத்துவதாகு நம்பப்படுகிறது. சிறுநீரில் யூரியா இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பல பிரச்சினைகளைத் தீர்க்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இது குறித்து எந்த ஆராய்ச்சி ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சிறுநீரில் பல வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், அதனால் அது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்றும் விளக்கப்பட்டது.
இதையும் படிங்க: கால் ஆணி பிரச்சனையால் அவதியா? இதோ சூப்பரான 6 இயற்கை மருத்துவம்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.