ஹைதராபாத்:ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே உடல் சில சமிக்ஞைகள் மூலம் எச்சரிக்கை விடுவதாக கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் தோன்றுவது, புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி என்று.
ஆனால், புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் உயிர்வாழும் விகிதம் அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதன் காரணமாகவே உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வரிசையில் உணவு உட்கொள்ளும் போது இந்த 5 அறிகுறிகளைக் எதிர்கொண்டால், புற்றுநோய் தீவிரமடைவதற்கு முன்பே குணப்படுத்தலாம் என்கின்றனர்.
உணவை விழுங்குவதில் சிரமம்:உணவை உட்கொள்ளும் போது சிலருக்கு வலி, தொண்டையில் இறுக்கம் போன்ற அசெளகரிய உணர்வுகள் ஏற்படுகிறது. இவை அனைத்தும் புற்றுநோயிற்கான அறிகுறிகள் என அமெரிக்காவின் புற்றுநோய் சங்கத்தின் (American Cancer Society) ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த அறிகுறிகளை எதிர்கொண்டால் தலை, கழுத்து, தாடை பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெஞ்செரிச்சல்:நெஞ்செரிச்சல் ஏற்படுவது பொதுவானதாக இருந்தாலும் மார்பு, வயிறு பகுதிகளில் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இவை அனைத்தும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.