தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இ-சிகரெட் பயன்படுத்துவதால் இப்படி ஒரு பாதிப்பா? அமெரிக்க ஆய்வு கூறுவது என்ன? - மின் சிகரெட் பாதிப்புகள்

E-Cigarettes: இ-சிகரெட் புகைப்பவர்கள் கரோனா தொற்றுகளால் அதிகமாக பாதிக்கப்படுவர் என்று ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், இ-சிகரெட் புகைப்பது SARS-COV-2 வைரஸ் தொற்றையும் உருவாக்கும் என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 1:01 PM IST

ஹைதராபாத்:புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்கும் மாற்று முயற்சிதான் இ-சிகரெட். அதாவது மின் சிகரெட் விளம்பரபடுத்தப்பட்ட நிலையில், இ-சிகரெட் அனேக மக்களிடையே புழக்கத்திற்கு வந்தது. புகை பழக்கத்திலிருந்து மீண்டு வர முயன்று, மின் சிகரெட்டுகளை பயன்படுத்திய அனைவரும் மின் சிகரெட்டுகளுக்கு அடிமையாயினர். இந்த மின் சிகரெட்டுகளில் பொதுவாக நிக்கோட்டின், புரோப்பிலீன் கிளைக்கோல், வெஜிடபிள் கிளிசரின் மற்றும் சுவை இரசாயனங்கள் போன்றவற்றால் ஆன மின் திரவம் இருக்கும்.

மின் சிகரெட்டுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. சாதாரண சிகரெட் புகைப்பதை விட, மின் சிகரெட் அதிகமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரிய வந்தது. 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 16 லட்சத்து 91 ஆயிரத்து 781 ரூபாய் மதிப்பிலான மின் சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இ-சிகரெட் இதயம், மூளை மற்றும் நுரையீரல் பாதிப்பு, ஆண், பெண் என இரு பாலருக்கும் மலட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களும், இளம் தலைமுறையினரும் இ-சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர். இதை கருத்தில் கொண்ட மத்திய அரசு, 2019ஆம் ஆண்டு இ-சிகரெட் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் படி, இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, சேமிப்பு மற்றும் விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தடை செய்யப்பட்ட இ-சிகரெட் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்காக அரசு, இ-சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இ-சிகரெட் பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தும் வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், இ-சிகரெட் புகைப்பது SARS-COV-2 வைரஸ் தொற்றை உருவாக்கும் என்று கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்விற்காக, மனித மூச்சுக்குழாய் எபித்திலியத்தின் 3டி திசு மாதிரியை உருவாக்க, நன்கொடையாளர்களிடம் இருந்து காற்றுப்பாதை ஸ்டெம் செல்களை பெற்றனர். இந்த ஆய்வில், SARS-COV-2 வைரஸின் செல் ஏற்பியான ACE2 திசு அளவு அதிகரிப்பதை கண்டறிந்தனர். இந்த ஆய்வில், இ-சிகரெட்டில் உள்ள புரோப்பிலீன் கிளைக்கால், வெஜிடபிள் கிளிசரின், நிக்கோட்டினுடன் இணைந்து SARS-COV-2 வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுவதை மேம்படுத்துவதாக கண்டறிந்தனர்.

நடுநிலை முதல், முதல் அடிப்படை pH வரையிலான மின் திரவங்கள், வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு, செல் அமைப்புகள் உயிரியல் துறையின் முதுகலை ஆய்வாளர் ரட்டபோல் ஃபாண்ட்தாங் கூறினார்.

பல்கலைக்கழக பட்டதாரி பிரிவின் பேராசிரியர் ப்ரூ டால்போட், “இ-சிகரெட் பயன்பாடு, SARS-COV-2 நோய்த்தொற்றுக்கான பாதிப்பை அதிகரிக்கும் என்பதால், இ-சிகரெட் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதற்காக இ-சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும். இ-சிகரெட் பயன்படுத்தும் நபர் ஒருவர், SARS-COV-2 நோயால் பாதிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் அதிக சிக்கல்கள் உள்ளன” என்று கூறினர்.

இதையும் படிங்க:கைக் குலுக்குதல் மூலம் உடல் நோய்களை கண்டறியலாமா? - ஆய்வு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details