ETV Bharat / state

சேலை உற்பத்தி முடங்கும் அபாயம்! தேனியில் விசைத்தறி தொழிலாளர்கள் திடீர் போராட்டம்! - POWERLOOM WORKERS STRIKE

தேனியில் உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் ஊதிய உயர்வு கேட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சேலை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலை நெசவு செய்யும் இயந்திரம்
சேலை நெசவு செய்யும் இயந்திரம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 10:47 AM IST

தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள நெசவு மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அடிப்படை வசதி உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படாத நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தினசரி ரூ.30 லட்சம் மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அரசு தலையிட வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் ஆகிய கிராமங்களில் நெசவுத் தொழில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அங்கு 100க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில், சுமார் ஐந்தாயிரம் நெசவாளர்கள், நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள விசைத்தறி கூடங்கள் மூலம் பல்வேறு உயர் ரக காட்டன் சேலைகள் மற்றும் பேன்சி ரக சேலைகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை:

மேலும், சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு, பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம், டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது விட்டதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் 50 சதவீத ஊதிய உயர்வு, 20 சதவீதம் போனஸ், விசைத்தறி கூடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: “ப்ளீச்சிங் பவுடரில் பண முறைகேடு”- தலித் விடுதலை இயக்கம் அளித்த பரபரப்பு மனு!

ஆனால், இதுகுறித்த விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால், அதனைத் தொடர்ந்து டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனையின் முடிவில் டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்து, வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ரூ.30 லட்சம் உற்பத்தி பாதிப்பு:

தற்போது, டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால், வேட்டி சேலை உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சக்கம்பட்டி பகுதி நெசவாளர்களும் விரையில் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

தற்போது, நெசவாளர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், தினமும் ரூ.30 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளதாகவும், அதனால் நெசவாளர்களின் கூலி உயர்வு பிரச்சனையில் அரசு தலையிட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.