மழை, குளிர்காலங்களில் குளிர்ச்சியான காலநிலை காரணமாக பலரும் தண்ணீர் குடிப்பதை மறந்து விடுகிறார்கள். இதற்கு காரணம், குளிர்காலத்தில் தாகம் குறைவாக எடுப்பது தான். குளிர் காலமாக இருந்தாலும், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். தண்ணீர் குடிக்க முடியாமல் நீங்களும் சிரமப்படுகிறீர்களா? உங்களுக்காக, குளிர்காலத்திலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க சில டிப்ஸ்களை கொண்டு வந்துள்ளோம். அது என்ன என்பதை தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.
ஹெர்பல் டீ: வெறும் தண்ணீரை குடித்து சலிப்படைந்து விட்டால், ஹெர்பல் டீ குடிக்க முயற்சி செய்யுங்கள். இது சிறந்த மாற்றாக அமையும். கெமோமில், இஞ்சி, கிரீன் டீ, போன்ற பல மூலிகை டீக்கள் இருக்கின்றன. இவை, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்தும். ஹெர்பல் டீ, உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றுவதால், நீரைப் பருகுவதில் சிரமம் உள்ளவர்கள் இப்படி முயற்சி செய்து பாருங்கள்.
ஹெர்பல் டீ (Credit - ETVBharat) நீர்சத்துள்ள உணவுகள்:வெள்ளரி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் சுரைக்காய், பூசணி, முட்டைக்கோஸ் போன்ற நீர்சத்துள்ள காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கவும். இவை, திரவ உட்கொள்ளலை கணிசமாக அதிகரிக்க உதவும். இவற்றை உண்பதால், நீர்ச்சத்து கிடைப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. உதாரணமாக, தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பது மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் லைகோபீனும் உள்ளது.
காய்கறி நிறைந்த உணவுகள் (Credit - ETVBharat) இதையும் படிங்க:வெறும் வயிற்றில் சீரக தண்ணீரும் அதன் 7 பயன்களும் இதோ..!
எலக்ட்ரோலைட்/இளநீர்:வெறும் தண்ணீரை குடிப்பதில் சிரமம் உள்ளவர்கள், எலக்ட்ரோலைட் மாத்திரைகள் அல்லது பவுடர்களை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதனால், சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடலுக்கு தேவையான நீரேற்ற அளவை பாரமரிக்க உதவுகிறது. இருப்பினும், இளநீர் குடிப்பது சிறந்த மாற்றாக இருக்கும். உடலுக்கு தேவையான நீரேற்றமும் பொட்டாசியமும் இளநீரில் உள்ளது. குறைந்த சர்க்கரை அளவை கொண்ட பானத்தை தேடும் நீரிழிவு நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த தீர்வு.
இளநீர் (Credit - ETVBharat) வாட்டர் பாட்டில் மேஜிக்:புதிதாக வாட்டர் பாட்டில் வாங்கினால், அதில் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கம் இயல்பாகவே வந்து விடும். அதே போல, இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் வகைவகையான பாட்டில்கள், நீர் அளவு குறியீடு உள்ள பாட்டில்களை தேர்ந்தெடுக்கலாம். இவற்றை பயன்படுத்துவதால், தண்ணீர் குடிப்பது மிகவும் பிடித்த வழக்கமாக மாறும்.
கோப்புப்படம் (Credit - ETVBharat) தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்:தினசரி உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்திருக்கிறோமா என்பதை கணக்கில் வைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். water tracker செயலி, தண்ணீர் குடிப்பதை நினைவூட்டி நாம் நீரேற்றமாக இருக்கின்றோமா என்பதை உறுதி செய்யும்.
- இது தவிர, சப்ஜா விதை, புதினா இலை, வெள்ளரி போன்றவற்றை வாட்டர் பாட்டிலில் சேர்ப்பதால், தண்ணீர் குடிப்பதற்கு ஆர்வம் வரும்.
- ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு அலாரம் வைத்து தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும்.
இதையும் படிங்க:வெறும் வயிற்றில் வெந்நீர் ஏன் குடிக்கணும் தெரியுமா? வெந்நீர் குடிப்பதால் குணமாகும் 7 நோய்கள் இதோ!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.