ஹைதராபாத்:தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் ஒரு சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் தைராய்டு சுரப்பி, உடலின் தேவைக்கேற்ப ஹார்மோன்களை தொடர்ந்து சுரக்கச் செய்து, மெட்டபாலிசத்தை சீராக்குகிறது.
மூளை, இதயம், தசை போன்ற அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குவதற்கு தைராய்டு சுரப்பி முக்கிய பங்கை வகுக்கிறது. இந்த அமைப்பு நமது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வேலையைச் செய்கிறது. ஆனால், இந்த சுரப்பியால் வெளியிடப்படும் தைராக்ஸின் ஹார்மோன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல சர்க்கரை நோய் நிபுணர் பி.வி. ராவ் விளக்குகிறார்.
தைராய்டு நோய் இருப்பவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது என்கிறார் மருத்துவர். தைராய்டு இருப்பதை எவ்வாறு அறிவது? உடல் எடை அதிகரித்தால் தைராய்டு பிரச்சனையா? தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்...
தைராய்டு பிரச்சனைகள் இரண்டு வகைப்படும்:
- ஹைப்போ தைராய்டிசம் (Hyper Thyroidism)
- ஹைப்பர் தைராய்டிசம் (Hypo Thyroidism)
தேவைக்கு அதிகமாக ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படும்போது, ஹைப்போ தைராய்டிசம் எற்படுகிறது. இயல்பான அளவை விட ஹார்மோன் குறைவாக உற்பத்தியானால், அது ஹைப்போ தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது.
தைராய்டு அறிகுறிகள்:
- அதீத உடல் சோர்வு
- திடீரென எடை அதிகரிப்பு (தைராய்டு ஹார்மோன்கள் குறையும் போது உடல் எடை அதிகரிக்கிறது)
- சட்டென உடல் எடை இழப்பு (தைராய்டு ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது உடல் எடை குறைகிறது)
- முடி உதிர்வு
- அதிகப்படியான வியர்வை
- கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுவது தைராய்டின் முக்கிய அறிகுறியாகும். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த அறிகுறி ஏற்படுகிறது
- உடல் வெப்பநிலையில் மாற்றம். அதாவது, உடல் குளிராகவோ அல்லது மிகவும் சூடாக உணர்வது
- தோல் வறட்சி
- கை, கால்களில் பிடிப்பு
- மலச்சிக்கல்
- மன அழுத்தம்
- மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்
ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) அறிகுறி:
- தசை பலவீனமாக உணர்வது அல்லது கை, கால்களில் கூச்ச உணர்வு
- பார்வை கோளாறு
- வயிற்றுப்போக்கு
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- ஹைப்போ தைராய்டிசம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது
- தலை சுற்றல், மயக்கம்
- ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அலட்சியப்படுத்தினால் இதய பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கிறார் மருத்துவர் பி.வி.ராவ்.
இதையும் படிங்க:தைராய்டு நோய் என்றால் என்ன? - பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி? விளக்குகிறார் மருத்துவர் நிவேதா ஸ்ரீவத்சா!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்