இப்போதெல்லாம் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பலரும் பல முயற்சியை தினந்தோறும் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான், சாதத்தை தவிர்த்து சப்பாத்தியை சாப்பிடுவது. சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்பது பல நீரிழிவு நோயாளிகளின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆனால், உன்மையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா? சப்பாத்தி சப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா? போன்ற கேள்விகளுக்கு முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் ஜானகி ஸ்ரீநாத் பதிலளித்துள்ளதை இங்கு பார்க்கலாம்.
“நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கென பிரத்யேக உணவு முறையை கடைபிடிக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் முன், உடல் எடை குறைந்துள்ளதா இல்லையா என பரிசோதித்து, குறைவாக இருந்தால், சரியான நிலைக்கு அதிகரிக்க வேண்டும். அதிகமாக இருந்தால், குறைக்க முயற்சிக்க வேண்டும். மேலும், நீங்கள் நாள் முழுவதும் உடல் சம்பந்தப்பட்ட எந்த வகையான வேலை செய்கிறீர்கள்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் ஜானகி ஸ்ரீநாத்.
எது சிறந்தது?:மேலும், சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரிய வித்தியாசம் இல்லை. உடலுக்குத் தேவையான ஆற்றலைக் குறைக்கும் அளவுக்கு கலோரிகளை உட்கொள்கிறோமா என்பதைச் சரிபார்த்தால் போதும்.ஆனால், எவ்வளவு சாதம் உட்கொள்கிறோம் என்பதை கவனிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சாதம் சாப்பிட்டல் தான் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என நினைத்து சப்பாத்தியை அதிகமாக சாப்பிட்டால் எந்த பலனும் இருக்காது.