தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் 'புஷ்பா 2' திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. புஷ்பா படத்தில் மிரட்டல் லுக்கில் நடித்துள்ள அல்லு அர்ஜுனின் நடிப்பு ஒருபுறம் ரசிகர்களை ஆரவாரத்தில் ஈடுபடவைத்துள்ள நிலையில், மறுபுறம் அல்லு அர்ஜூனின் கச்சிதமான உடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
படத்தில் அல்லு அர்ஜுன் தோன்றும் காட்சிகளும், அவரது மின்னல் வேக நடனமும், உடலமைப்பும் கம்பீரமாக உள்ளது என்ற கமெண்டுகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. 42 வயதான அல்லு அர்ஜீன், இந்த வயதிலும் உடலை எப்படி கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், அல்லு அர்ஜுனின் டயட் ரகசியம் மற்றும் உடற்பயிற்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
மார்னிங் வொர்க் அவுட்: பல படங்களில் சிக்ஸ் பேக் வைத்து நடித்து வரும் அல்லு அர்ஜுன், காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய தவருவதே இல்லையாம். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், ஆற்றல்களை தக்க வைக்கவும் உடற்பயிற்சியுடன் நாளை தொடங்குகிறார். தினந்தோறும் 45 நிமிடம் டிரெட்மில்லில் ஓடுவது, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சியில் தன்னை கட்டாயம் ஈடுபடுத்தி கொள்வாராம்.
முட்டை:அதை தொடர்ந்து, காலை உணவாக அதிக புரதச் சத்துள்ள உணவை எடுத்துக்கொள்கிறார். அல்லு அர்ஜுனின் டயட் உணவில் கட்டாயம் முட்டைகள் இருக்குமாம். காலை உணவை தொடர்ந்து, நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்கிறார். தினசரி உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்வது, தசையை மேம்படுத்தவும், பசி எடுக்காமல் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
இவர், கார்போஹைட்ரேட் உணவுகளை பெரிதாக விரும்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர், வயிறு பெரிதாக வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:70 வயதிலும் ஃபேஷனில் டஃப் கொடுக்கும் உலக நாயகன்..கமலின் 7 மிரட்டல் லுக் இதோ!