தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

குடலை எளிதாக சுத்தம் செய்யும் 6 இயற்கை பானங்கள்..தினம் எழுந்ததும் குடிங்க! - GUT CLEANSE DRINK

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருக்கும் குடலை, ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைக்க உதவும் இயற்கையான பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Jan 6, 2025, 1:24 PM IST

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியமாக இருப்பது இன்றியமையாததாக இருக்கிறது. ஒரு சுத்தமான மற்றும் நச்சுத்தன்மையற்ற குடல் சிறந்த உடலையும் மனநிலையை ஆதரிக்கவும் உதவுகிறது. அந்த வகையில், குடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், குடலை சுத்தப்படுத்தவும் என்ன செய்வது என தெரியாமல் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான பானங்களை ட்ரை செய்து பாருங்கள். இவை, குடலில் உள்ள நச்சுகளை திறம்பட நீக்கி சுத்தமாக வைக்கும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை:ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து நாளை தொடங்குங்கள். இது, குடலை சுத்தப்படுத்தும் எளிய வழியாகும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீர், செரிமான அமைப்பை தூண்டுகிறது. கூடுதலாக, நாள் முழுவதும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. வாழ்நாள் முழுவதும் எலுமிச்சை பழத்தை தவறாமல் உட்கொள்வது நமது குடல் ஆரோக்கியம் மற்றும் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை கணிசமாக குறைப்பதாகNCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோப்புப்படம் (Credit - Pexels)

கிரீன் டீ: கிரீன் டீயில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது மற்றும் இயற்கையான நச்சு நீக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதிலுள்ள கேடசின்கள், கல்லீரல் செய்ல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சமநிலை படுத்தவும் உதவுகிறது.

கோப்புப்படம் (Credit - Pexels)

ஆலோ வேரா சாட்: கற்றாழை சாறு, அதன் சுத்திகரிப்பு பண்புகளுக்காக பெயர் பெற்றது. இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவியாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை என அளவோடு குடிக்கலாம்.

கோப்புப்படம் (Credit - Pexels)

பெருஞ்சீரகம் தண்ணீர்: குடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க பழங்காலத்தில் இருந்து பெருஞ்சீரகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெருஞ்சீரகத்தை இரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து , காலையில் அந்த தண்ணீரை குடிப்பதால் செரிமானம் மேம்படுத்தப்பட்டு குடல் சுத்தப்படுத்தப்படும். பெருஞ்சீரகத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

கோப்புப்படம் (Credit - Pexels)

இஞ்சி டீ: குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக இருப்பது இஞ்சி. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அஜீரணத்தை எளிதாக்கும். நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவி செய்கிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும் என NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆப்பிள் சைடர் வினிகர்: ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து உணவுக்கு முன் குடிப்பதால் செரிமானம் மேம்படும். இதிலுள்ள அசிட்டிக் அமிலம் வயிற்றில் உள்ள pH அளவை சமன் செய்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.

இதையும் படிங்க:

உடல் எடையை குறைக்கும் 3 சூப்பர் டீடாக்ஸ் டிரிங்ஸ்..எப்படி குடிக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க!

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்த நீர் குடித்தால் நல்லதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details