சென்னை:மேற்கத்திய பாரம்பரிய இசை மனஅழுத்த சிகிச்சைக்கு உதவுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம்: மனஅழுத்தம் என்பது எண்ணங்கள், உடல் மற்றும் மனநிலை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அசாதாரண மாற்றங்களால் ஏற்படுகிறது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை, தலைவலி மற்றும் பசியின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இன்றைய காலத்தில் பணிக்கு செல்லும் பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆய்வுகளின் படி மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். மன அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளை விட இசையே நல்ல முன்னேற்றத்தை தருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வு:மொஸார்ட் மற்றும் பீத்தோவன் எழுதிய மேற்கத்திய பாரம்பரிய இசை (Western Classical Music) மன அழுத்த சிகிச்சைக்கு உதவுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன அழுத்தம் மற்றும் மன சோர்விற்கு பல மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், மனச்சோர்வு குணமாவதில்லை. தொடர்ந்து நீடிப்பதாகவும், இசை மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுவதாக செல் அறிக்கைகள் என்ற ஆங்கில அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வின் போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியான முகங்களை கொண்டு வருவதை காட்டிலும் சோகமான முகங்களை எளிதில் கொண்டுவந்தனர். இந்த நிலையில் சீனாவின் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 13 நபர்களிடம் மொஸார்ட் மற்றும் பீத்தோவன் எழுதிய மேற்கத்திய பாரம்பரிய இசையை கேட்க வைத்து, அவர்களின் மூளையை ஆராய்ந்தனர்.
மேலும் அவர்களின் மூளையை தூண்டும் விதமாக மின்முனைகளை பொருத்தி அவற்றை மூளையின் அமிக்டாலா பகுதியில் வைத்தனர். அமிக்டாலா என்பது மனிதனின் சிந்தனை, பகுத்தறிவு மற்றும் மொழித்திறனுக்கு உதவுகிறது. அதாவது ஒரு விலங்கு நம்மை தாக்க முற்படும் போது, நாம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடுவது, நமது ஆடை நழுவும் போது அதை பிடிப்பது உள்ளிட்ட செயல்முறைக்கு உதவுவது தான் மூளையின் பெரிய பகுதியான முன்மூளையில் அமைந்துள்ள அமிக்டாலா ஆகும்.
இசையே மருந்து:ஸ்ட்ரியா டெர்மினலிஸின் பெட் நியூக்ளியஸ் (BNST - bed nucleus of the stria terminalis) என்பது ஒரு பன்முக மற்றும் சிக்கலான லிம்பிக் ஃபோர்பிரைன் அமைப்பாகும். இது மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ் (NAc - nucleus accumbens) மகிழ்ச்சியை அனுபவிக்க உதவுகிறது. இசையை கேட்பதன் மூலம் இந்த மூன்று பகுதிகளும் ஒத்திசைகின்றன. இதன் மூலம் இசை மன அழுத்தத்திற்கு எதிரானதாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு குறித்து ஷாங்காய் ஜியோ டோங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், நரம்பியல் அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநருமான பொமின் சன் கூறுகையில், “ஸ்ட்ரியா டெர்மினலிஸின் பெட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ் சுற்று நீட்டிக்கப்பட்ட அமிக்டாலாவின் பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சுற்றுக்கும் அமிக்டாலாவிற்கும் இடையே உள்ள உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இசை மீது பெரிதாக நாட்டமில்லாதவர்கள் அல்லது இசையை அதிகளவில் கேட்காதவர்களுடன் ஒப்பிடுகையில், இசை மீது அதிக நாட்டம் கொண்ட நோயாளிகளிடம் மன அழுத்தம் வெகுவாக குறைந்ததை காண முடிந்தது. பெரும்பாலான நோயாளிகள் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட மேற்கத்திய கிளாசிக்கல் இசையை நன்கு அறிந்திருக்கவில்லை. எங்களின் ஆராய்ச்சி நரம்பியல், மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளை ஒருங்கிணைக்கிறது” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:வாரத்திற்கு இத்தனை அடி நடந்தால் போதுமா? சென்னைவாசிகளின் லேட்டஸ் ஃபேவரைட் வாக்கிங் ஸ்பாட் இது தான்! - CHENNAI HEALTH WALK