ஹைதராபாத்:நடிகைகளுக்கு மட்டும் எப்படி முகம் க்ளியராகவும், பளபளப்பாகவும் இருக்கிறது என நாம் பலமுறை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்போம். இதற்கு காரணம் மேக்கப் என பலரும் சொல்லி கேட்டிருப்ப்போம். ஆனால், அது தான் இல்லை. மேக்கப் என்பதற்கும் சருமப் பராமரிப்பு என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
சருமம் ஆரோக்கியமாக இருந்தாலே முகம் க்ளியராகவும் பளபளப்பாகும் ஜொலிக்கும். இதற்கு தான், அனைவரும் கட்டாயமாக ஸ்கின் கேரை பின்பற்ற வேண்டும் என பலரும் அறிவுறுத்துகின்றன. "சரும ஆரோக்கியம் என்பது அழகு மட்டுமல்ல; இது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும்" என சமீபத்தில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதோடு, தனது முகம் பளபளப்புக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்ஸ்களை தனது 'டே இன் மை லைப்' வீடியோவில் வெளிப்படையாக கூறியிருந்தார். அதில், சரும பளபளப்புக்கு ரெட் லைட் தெரபி (Red Light Therapy) மேற்கொள்வதாக அவர் கூறியிருப்பது என்ன? அதை செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்..
ரெட் லைட் தெரபி (RTL) என்றால் என்ன?: மனிதனின் சருமத்தின் மேல் தோன்றும் தழும்புகள், சுருக்கங்கள், முகப்பரு போன்றவற்றை சரி செய்து முகம் மற்றும் உடல் அழகை மேம்படுத்த உதவும் ஒரு சிகிச்சை முறை தான் இந்த ரெட் லைட் தெரபி. இதில் குறைந்த அளவு சிவப்பு ஒளியை பயன்படுத்துகின்றன.
இது, முகம் பராமரிப்பிற்கு மட்டும் தானா? என்றால் இல்லை. இந்த தெரபி, முழு உடல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன. குறிபிட்ட பகுதிகளை குறி வைக்க கையடக்க சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எதையெல்லாம் சரி செய்யும்?
- மூட்டு வலி பிரச்னைகள்
- இரத்த ஓட்டம் அதிகரிப்பு
- காயங்களை ஆற்றுதல்
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
- தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது
எப்போதும் இளமையாக இருக்க முடியுமா?:உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், தழும்புகள், கோடுகளை குறைத்து சருமத்திற்கு தேவையான ஊக்கத்தை கொடுக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், முதுமையால் ஏற்படும் சரும பிரச்சனையை தடுக்கிறது.