தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

'வாரத்திற்கு இத்தனை முறை வெயிட் செக் செய்தால் எடை குறையும்' - ஆய்வு சொல்வது என்ன?

எத்தனை நாள்களுக்கொரு முறை எடை சரிபார்க்க வேண்டும்? தினசரி வெயிட் செக் செய்வதால் உடல் எடை குறையுமா? போன்ற நீண்ட நாள் கேள்விகளுக்கு ஆய்வு சொல்லும் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்...

By ETV Bharat Health Team

Published : 5 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- Getty Images)

உடல் எடையை கட்டுக்குள் வைத்து ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பது தான் பலரது ஆசையாகவும் லட்சியமாகவும் இருக்கிறது. அதற்காக பலரும் பல முயற்சிகளையும் செய்து தான் வருகின்றனர். அதிலும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பற்றி சொல்லவே தேவை இல்லை. அன்றாட வாழ்வில் உடல் எடையை கண்ட்ரோலாக வைக்க தினசரி அல்லது வாரத்திற்கு ஒரு முறை என உடல் எடையை செக் செய்து வருகின்றனர்.

இப்படி, தினசரி உடல் எடையை செக் செய்வது உளவியல் ரீதியான பிரச்சனைகளை தருவதாக ஒரு புறம் கருத்துக்கள் பரவினாலும், தினசரி உடல் எடையை பார்ப்பதால் ரிசல்ட் நன்றாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இப்போது அந்த விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்..

புளோரிடா மற்றும் வர்ஜீனியா பல்கலைக்கழகம் இணைந்து, எடை இழப்புக்காக மக்கள் தங்கள் எடையை எவ்வளவு அடிக்கடி சரிபார்க்கிறார்கள் என்ற ஆய்வை மேற்கொண்டனர். அந்த வகையில், அதிக எடை கொண்ட 74 நபர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு எடை இழப்புத் திட்டத்தைப் பின்பற்றி, ஒன்பது மாதங்களுக்கு அந்த எடையை பராமரிக்க முயற்சிக்கும் போது இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த இடைப்பட்ட ஆய்வில் சில முக்கிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, குறிப்பாக டயட் விதிகளை கடைபிடித்து, உடற்பயிற்சி செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் உடல் எடையை சரிபார்ப்பவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லை. மேலும், வாரத்தில் ஐந்து நாட்கள் எடையைச் செக் செய்தவர்கள் கொஞ்சம் எடை குறைந்துள்ளனர். அதேபோல, வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே எடையை சரிபார்த்தவர்கள் மீண்டும் எடை அதிகரித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் டயட், உடற்பயிற்சி மட்டும் செய்யாமல், உடல் எடையை சரிபார்ப்பதும் முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.

இவற்றுடன் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, அதிக சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள் தவிர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக, உடலை நீரேற்றமாக வைத்திருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

இதையும் படிங்க

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details