ETV Bharat / state

'200 இல்லை, 200க்கும் மேல் வெற்றி'; திமுக செயற்குழுக் கூட்டத்தில் சூளுரை! - DMK EXECUTIVE COMMITTEE

தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பேசியதை சுருக்கமாக பார்க்கலாம்.

திமுக செயற்குழுக் கூட்டம்
திமுக செயற்குழுக் கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2024, 3:03 PM IST

சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.22) தி.மு.க. செயற்குழுக் கூட்டம் காலை 10.00 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஐ. பெரியசாமி, பொன்முடி மற்றும் அமைச்சர்கள், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிர்வாகிகள் உட்பட 600 மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் மேடையில் பேசியதை சுருக்கமாக பார்க்கலாம்.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்:

முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மேலும் நம்மை வலுப்படுத்த வேண்டும். 2024 தேர்தலில் 221 தொகுதிகளில் நாம் முதலிடம். முதலமைச்சர் மிக வலுமைமிக்க மற்றும் மக்களை கவரும் தலைவராக இருக்கிறார். நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை; இந்தியாவுக்கான வெற்றி. ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு பாடுபடும். 200 இல்லை, 200க்கும் மேல் வெற்றி பெறுவோம் என்றார்.

இதையும் படிங்க: 'அமித் ஷாவுக்கு கண்டனம்' - திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

திருச்சி சிவா பேச்சு:

கூட்டணியை எப்படி கட்டமைக்க வேண்டும், அக்கூட்டணியை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஸ்டாலினை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லியில் தலைவர்கள் சொல்கிறார்கள். அம்பேத்கர் அவமதிக்கப்பட்ட போது முதலில் கொந்தளித்த மாநிலம் தமிழ்நாடு. டங்க்ஸ்டன் மட்டுமில்லை, குடியுரிமை திருத்தச் சட்டம் உட்பட பாஜக என்ன மசோதா கொண்டு வந்தாலும் அதிமுக ஆதரிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லை, இச்சூழலில் அகில இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த திமுகதான் இருக்கிறது என்றார்.

கனிமொழி:

மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. மாநில உரிமைகளை மட்டும் பேசிய நிலை மாறி, நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறியிருக்கிறது. 50% வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். மகளிர் வாக்குகளை முழுமையாக கவரும்படி மகளிரணி பணிகளைத் தொடங்கிட வேண்டும். வீடு வீடாகச் சென்று சாதனைகளை எடுத்துச் சொல்லும் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவரும் பணி வரை திமுக மகளிர் செய்வார்கள் என கூறினார்.

பொதுச்செயலாளர் துரைமுருகன்:

200 இடங்களில் வென்றாக வேண்டும் என்ற வைராக்கியத்தை கழகத்தினரிடம் பாய்ச்சுகிறார் முதலமைச்சர். யோசித்து, அளந்து, நிதானித்துப் பேசுகிறார் முதலமைச்சர். கூட்டணியை கட்டமைப்பதில், வழிநடத்துவதில் தலைவருக்கு இணை யாருமில்லை. கூட்டணி, ஆட்சி, கட்சி, வேட்பாளர் என அனைத்தையும் தலைவர் பார்த்துக் கொள்கிறார். நாம் களத்தை பார்த்துக் கொண்டால் போதும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.