தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை ஆல் கிளியர் செய்யும் வாழைத்தண்டு..இப்படி எடுத்துக்கோங்க! - BANANA STEM JUICE FOR KIDNEY STONES

வாழைத்தண்டை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit- ETVBharat)

By ETV Bharat Health Team

Published : Nov 9, 2024, 12:19 PM IST

வாழைப்பூவில் தொடங்கி வாழைத்தண்டு வரை வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்கக்கூடும். அப்படி, இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்..

சிறுநீரக கற்களை வெளியேற்றும்: வாழைத்தண்டு என்றதும் நமது நினைவுக்கு தட்டுவது, இது சிறுநீரக கற்களை கரைக்கும் என்பது தான். வாழைத்தண்டிற்கு இயல்பாகவே, சிறுநீரை அதிகளவில் பெருக்கும் தன்மை உள்ளது. இதன் காரணமாக சிறுநீரகங்கள் மற்றும் சீறுநீரக பாதையில் இருக்கக்கூடிய சிறியளவிளான கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும், சிறுநீரகங்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு கிருமிகளை அழிக்கிறது.

  • வாழைத்தண்டு ஜூஸ் + எலுமிச்சை பழ சாறு:சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள், ஒரு கிளாஸ் வாழைத்தண்டு ஜூஸ்-உடன் எலுமிச்சை பழ சாற்றை கலந்து குடித்து வர கால்சியம் சிட்ரேட் மற்றும் கால்சியம் கிரிஸ்டல்ஸ் போன்ற சிறுநீரக கற்களை வராமலும் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து: வாழைத்தண்டில் இருக்க கூடிய துவர்ப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. குறைந்த கிளைசெமி குறியீடு (Low glycemic index) கொண்ட உணவுகளில் இதுவும் ஒன்று. மேலும், இதிலுள்ள வைட்டமின் பி6, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துவதால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

  • சர்க்கரை நோயாளிகள் வாழைத்தண்டை ஜூஸ்ஸாக குடிப்பதை விட, பொரியலாக வாரம் இரண்டு முதல் மூன்று சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

எடையை குறைக்கும்:உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற உணவாக வாழைத்தண்டு இருக்கிறது. இதில் உள்ள நார்சத்து வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் விளைவாக, எடை வேகமாக குறையும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: இருதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் சீராக செயல்படுவதற்கு அத்தியவசியமாக இருக்கக்கூடிய பொட்டாசியம், வாழைத்தண்டில் அதிகளவில் உள்ளது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்வதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துக்கிறது.

மலச்சிக்கல் குணமாகும்:பலரும் அவதிப்படும் மலச்சிக்கலை எளிதில் போக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. இதிலுள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை அதிகப்படுத்துவதோடு மலக்கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்:இரத்ததில் இரும்பு சத்து குறைவாக இருப்பதால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்கிறது. இரத்த சோகையினால் அவதிப்படுபவர்கள், வாரத்தில் மூன்று முறை வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இரத்த சிவப்பனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கெட்ட கொழுப்பு கரையும்: இரத்ததில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றலை வாழைத்தண்டு கொண்டுள்ளது. வாழைத்தண்டில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6, இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கும். இதனால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராது.

இதையும் படிங்க:

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் கருப்பு கவுனி...எப்படி சாப்பிடனும்?

இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details