சென்னை:"நமக்குச் சோறுதான் முக்கியம்" என்ற ராஷ்மிகா மந்தண்ணாவின் வைரல் வீடியோவை பார்த்திருப்போம்.. அதேபோலத்தான் ஜப்பானியர்கள் எங்களுக்கு விஷத்தன்மை நிறைந்த ஃபூகு(Fugu) மீன்தான் பிடிக்கும் என்கிறார்கள். உலகில் சைனைடு விஷம்தான் மிகக்கொடிய விஷம் என்பார்கள். ஆனால், அந்த சைனைடை விடப் பல மடங்கு கொடிய விஷம் கொண்டது இந்த ஃபூகு மீன்.
இந்த மீனைத்தான் ஜப்பானியர்கள் விரும்பி உண்பார்களாம். இதன் சுவையை ருசிப்பதற்கு விலைமதிப்பற்ற உயிரையே பணையம் வைக்கிறார்கள் ஜப்பானியர்கள். ஜப்பானிய மதிப்பு 4000 (yen)என்-க்கு விற்கப்படும் ஃபூகுவின் இந்திய மதிப்பு ரூ. 2200 வரை இருக்கலாம். இந்த மீன் இந்தியாவிலும் கிடைக்கிறது, இதன் இந்திய விலை சுமார் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறதாம்.
இதையும் படிங்க:வெயில் காலத்திற்கான 7 ஹைட்ரேஷன் டிரிங்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க.! - 7 Hydration Drinks For Summer
இந்த மீனின் கல்லீரல் மற்றும் கருப்பைகளில்தான் மொத்த நச்சுத்தன்மையும் இருக்கும் எனக்கூறப்படும் நிலையில், அதைச் சரிவரச் சுத்தம் செய்யாமல் மீனின் மற்ற சதைப் பகுதிகளில் விஷம் படிந்துவிட்டார் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை எனக்கூறப்படுகிறது. இந்த கொடிய விஷம் உள்ளே சென்ற பின் குறைந்தது 4 மணி நேரத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.
ஜப்பானைப் பொருத்தவரை இந்த மீனைச் சுத்தம் செய்யத் தனிப்பட்ட பயிற்சி தேவை எனவும் சுமார் 5 வருடங்கள் வரை பயிற்சி பெற்ற பின்னரே இந்த மீனைச் சுத்தம் செய்ய அரசால் உரிமம் வழங்கப்படும் எனவும் தெரிய வருகிறது.
அது மட்டும் இன்றி, இந்த மீனை விற்பனை செய்ய உணவகங்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. என்னதான் ரிஸ்கான விஷயமாக இருந்தாலும் சரி, உணவு மற்றும் சுவை என்று வரும் பொழுது அதை எதற்காகவும் சமரசம் செய்துகொள்ள ஜப்பானியர்கள் தயாராக இல்லை என்பதே இதன் உண்மை நிலவரம்.
இதையும் படிங்க:"என் உடல் என் உரிமை" கருணைக்கொலையை.. ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - Euthanasia Needs A Clear Solution