ஹைதராபாத்: ஆரோக்கியமற்ற, தவறான உணவு பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் வயது வித்தியாசமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. பசியின்மை, வயிறு மந்தமாக இருப்பது இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. அதிலும், வயிறு முழுவதும் கல் போல மாறி எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும் போது அந்த வேதனையே தனி தான்.
இதற்கு மருந்து தேடி அலைந்து பாடு படுவதற்கு பதிலாக, இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு இருப்பதாக பிரபல ஆயுர்வேத மருத்துவர் காயத்ரி தேவி கூறுகிறார். எளிதாக, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த மருந்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- இஞ்சி விழுது - 250 கிராம்
- கற்கண்டு பொடி -275 கிராம்
- சுக்குத் தூள் - 5 கிராம்
- திப்பிலி பொடி - 10 கிராம்
- மிளகு தூள் - 10 கிராம்
- ஏலக்காய் தூள் - 5 கிராம்
- தேன்
செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு காடாய்யை வைத்து, இஞ்சி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதன்பிறகு, அரைத்து வைத்துள்ள கற்கண்டு தூளை இஞ்சி விழுதுடன் சேர்த்து வதக்கவும்
- இப்போது, சுக்கு,மிளகு,ஏலக்காய் மற்றும் திப்பலி தூளை சேர்க்கவும்
- இந்தப்பொடிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்றாக நன்றாக கலந்த பிறகு, அடுப்பை அணைத்துவிடுங்கள்.
- இப்போது இந்த கலவையை தனியாக எடுத்து வைத்து அதில் தேவைக்கு ஏற்ப தேன் சேர்க்கவும்.
- அஜீரணக் கோளாறு உள்ளவர்களும், மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த மருந்தை உட்கொள்ளலாம் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்
- ஆஜீரண பிரச்சனையிலிருந்து விடுபட உணவுக்கு 10 நிமிடங்களுக்கு முன் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு ஸ்பூன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.