திரும்பத் திரும்ப சாப்பிடத் தோன்றும் ஸ்பானிஷ் ஆம்லெட்..ஈஸியா செய்வது எப்படி? - SPANISH OMELETTE RECIPE - SPANISH OMELETTE RECIPE
SPANISH OMELETTE RECIPE: ஆம்லெட் என்றாலே பலருக்கும் இங்கு எச்சில் ஊறும் தான். ஆனால், எப்பொழுதும் ஒரே வகையான ஆம்லெட்டை சாப்பிடாமல் அதில் கொஞ்சம் உருளைக்கிழங்கை வதக்கி போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ட்ரை பண்ணி பாருங்க..
ஹைதராபாத்:வீட்டில் முட்டை இருந்தால் போதும், நேரம் காலம் பார்க்காமல் ஆம்லெட் போட்டு சாப்பிடுவோம். அதையும் மீறி வெரைட்டியாக சாப்பிட தோன்றினால், பிரட் ஆம்லெட், முட்டை புர்ஜி என செய்து சாப்பிடுவோம். ஏன், சில நேரங்களில் காய்கறிகளில் கூட முட்டையை போட்டு வதக்கி சாப்பிடுவோம்.
ஆனால், நீங்கள் ப்ரேக் பாஸ்டாக முட்டையை சாப்பிட்டது உண்டா? இல்லையென்றால், தினமும் காலையில் எளிதாக செய்யக்கூடிய ஒரு வகையான ஆம்லெட் ரெசிபியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். அது தான் ஸ்பானிஷ் ஆம்லெட். இந்த வெரைட்டி ஆம்லெட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 6
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஸ்பானிஷ் ஆம்லெட் செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியதாக நறுக்கவும்