தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

வேகவைத்த முட்டை ஓட்டை உரிக்க முடியவில்லையா? உப்புக்கு பதில் இத யூஸ் பண்ணுங்க.! - An easy way to peel hard boiled eggs

வேக வைத்த முட்டையின் ஓட்டை பிரித்தெடுக்கும்போது அது சரியாக வராமலும், அல்லது முட்டையோடு சேர்ந்து ஓடு பிரிந்து வரவும் செய்யும். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? முட்டையில் இருந்து ஓட்டை ஈசியாக உரித்தெடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 4:01 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

சென்னை: சத்தான உணவுகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் கோழி முட்டையைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நாளைக்கு ஒன்றாவது உட்கொள்ள வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக முட்டையை எண்ணை ஊற்றிப் பொறிக்காமல் வேகவைத்துச் சாப்பிடுவது இன்னும் சிறந்தது எனவும் கூறுகிறார்கள். இந்த சூழலில் பல்வேறு வீடுகளில் முட்டைகளைத் தினம் தோறும் வாங்காமல் மொத்தமாக வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்து தேவை ஏற்படும்போது எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், அப்படி குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து வேக வைக்கும் முட்டைகள், அதன் மேல் இருக்கும் ஓட்டை எடுக்க முயற்சிக்கும்போது முட்டையோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டு வரும். பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் இதுபோன்ற சூழலால், முட்டையை வேக வைக்காமல் வருத்து சாப்பிடத் தொடங்கி விடுகிறார்கள்.

இதையும் படிங்க:ஆஃப் பாயில் சாப்பிட்டால் ஆபத்து! பரவும் பறவைக் காய்ச்சலால் எச்சரிக்கை - Bird Flu Health Advisory

வேக வைத்த முட்டை ஓட்டை சிரமம் இன்றி உரித்தெடுக்க என்ன செய்யலாம்?

  • குளிர்சாதனப் பெட்டியில் இருந்த முட்டைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் குளுமை போகும் வரை போட்டு வைக்க வேண்டும்.
  • பிறகு அந்த முட்டைகளை வேறு தண்ணீருக்கு மாற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்போதே அதில் பேக்கிங் சோடாவை அரை டீ ஸ்பூன் அல்லது உங்கள் அளவுக்கு ஏற்ப போட்டுக்கொள்ள வேண்டும்.
  • 20 நிமிடங்கள் கழிந்த பிறகு அந்த முட்டையை எடுத்து மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் போட வேண்டும்
  • நன்றாகச் சூடு ஆறிய பிறகு முட்டையின் ஓட்டை மெதுவாக உரித்து எடுக்க வேண்டும்.
  • இந்த பேக்கிங் சோடாவில் இருக்கும் காரத்தன்மை முட்டையின் தோல்களைத் தளரச் செய்து எளிதாக உரித்தெடுக்க உதவும்

வீடுகளில் முட்டை வேக வைக்கும்போது உப்பு போட்டுப் பார்த்திருப்போம். ஆனால் பேக்கிங் சோடா இன்னும் சிறந்த பலன் தரும். அதேபோல நீங்கள் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றும் பொழுது சில நேரங்களில் முட்டை ஓடு சிறிது அதில் உடைந்து விழுந்து விடும். அதை எடுக்க நாம் முயற்சிக்கும்போது நகர்ந்து போகும். இதை எளிதாக எடுக்கக் கையை கொஞ்சம் தண்ணீரில் நனைத்து ஈரமாக்கிக் கொண்டு எடுத்தால், எளிமையாக எடுத்துவிடலாம்.

இதையும் படிங்க:குளிர்சாதன பெட்டியில் வைக்கும் தக்காளி நீண்ட நாள் கெட்டுப்போகமல் இருக்க: இதை ட்ரை பண்ணுங்க.! - How To Store Tomato For Long Days

ABOUT THE AUTHOR

...view details