தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

மார்பகத்தில் கட்டி 'இப்படி' இருந்தால் புற்றுநோய் எச்சரிக்கை!..Stage 4ன் உயிர்வாழ்வு விகிதம் தெரியுமா?

நிலை 1 மார்பக புற்றுநோயின் உயிர்வாழ்வு விகிதம் சுமார் 93% எனவும் நிலை 4 மார்பக புற்றுநோய்க்கான உயிர்வாழ்வு விகிதம் சுமார் 24% என்கிறார் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வாதி பிரகாஷ்.

By ETV Bharat Health Team

Published : 5 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

சென்னை: 'இந்தியாவில், கேரளவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது' என்கிறார் ரேலா மருத்துவமனையின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வாதி பிரகாஷ். ஆண்டுதோறும் ஒவ்வொரு அக்டோபர் மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதனால், அக்டோபர் மாதம் 'பிங்க் அக்டோபர்'ஆக (Pink October) கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 13 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிககப்பட்டு வருகின்றனர். இதில் அதிக அளவில் கண்டறியப்படும் புற்றுநோய் மார்பக புற்றுநோய் தான். அதிகமாக இறப்பு ஏற்படுத்தக்கூடிய புற்றுநோயும் மார்பக புற்றுநோய் தான்.

மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வாதி பிரகாஷ் பேட்டி (Credit - ETVBharat TamilNadu)

இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார் மருத்துவர் ஸ்வாதி.

புற்றுநோய் வரக் காரணம்?:பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் என்று எதுவும் கிடையாது. காய்கறிகள் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது, மதுபழக்கத்தை குறைப்பதால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கலாம் என்கிறார் மருத்துவர்.

ஆண்டுக்கு ஒரு முறை மேமோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் (Credit - Getty Images)

மார்பக கட்டி இப்படி இருந்தால் ஆபத்து!: பொதுவாகவே, மார்பகத்தில் கட்டி இருப்பது புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்று. அதிலும், மார்பக கட்டி எப்போது வலி இல்லாமல் இருக்கிறதோ அப்போது தான் ஆபத்து அதிகம். காரணம், மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் கட்டி வலி இல்லாமல் தான் கண்டறியப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார் மருத்துவர்.

இதையும் படிங்க:மார்பக புற்றுநோய் பரம்பரை பரம்பரையாக வருமா? சர்வதேச ஆய்வு சொல்வதென்ன?

அதுமட்டுமல்லாமல், மார்பக தோல், மார்பக்காம்பு உள்வாங்கியது போல் இருப்பது, அக்குள் பகுதியில் நெறி கட்டியது போல் இருப்பதும் மார்பக புற்றுநோயிற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்காது.

மாதம் ஒருமுறை சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும் (Credit - Getty Images)

Stage 1 டு 4 உயிரிழப்பு விகிதம்:நிலை 1 மார்பக புற்றுநோயின் உயிர்வாழ்வு விகிதம் சுமார் 93%. அதே சமயம் நிலை 4 மார்பக புற்றுநோய்க்கான உயிர்வாழ்வு விகிதம் சுமார் 24% . இன்றளவும், மார்பகத்தில் கட்டி இருந்தால் அதை வெளியே சொல்வதற்கு பல பெண்கள் தயங்குகின்றனர்.ஆரம்ப காலத்தில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம்.

சுய பரிசோதனை: 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை சுய மார்பகப் பரிசோதனையும், ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம் பரிசோதனையும் செய்ய வேண்டும். அதிகப்பட்சமாக, 40 முதல் 50 வயது இடையேயான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படிங்க:மார்பக புற்றுநோய் மாதம்; இந்நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details