தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

அக்குள்களில் அதீத வியர்வை ஏற்படுகிறதா? கட்டுப்படுத்த இதை ஃபாலோ பண்ணுங்க.! - How to stop underarm sweat - HOW TO STOP UNDERARM SWEAT

அக்குள்களில் அதீத வியர்வை ஏற்படுவதை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 8:57 AM IST

சென்னை: வெயில் காலம் வந்து வியர்வையில் குளிக்க வைத்துக்கொண்டு இருக்கும் சூழலில், பலர் இந்த வியர்வைத் துர்நாற்றம் காரணமாக அதீத மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். வியர்வை வருவது நல்லதுதான். ஆனால் அதீத வியர்வையும் அதனுடன் துர்நாற்றமும் வருகிறது என்றால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

அலுவலகம் செல்லும் நபர்கள், விழாக்களுக்குச் செல்வோர், பேருந்து உள்ளிட்ட மக்கள் கூட்டம் நிறைந்த சூழலில் பயணிப்போர் உள்ளிட்ட பலரும் இந்த வியர்வைத் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். அவர்களுக்காகத்தான் இந்த தொகுப்பு.

இதையும் படிங்க:"சமைத்த உணவு" குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? கூடாதா? - Cooked Food In Refrigerator

அதீத வியர்வையா நீங்கள் என்னென்ன செய்யலாம்?

  • முடிந்தவரை காட்டன் துணிகளை அணிய வேண்டும்
  • துணிகளை மிக இருக்கமாக இல்லாமல் தளர்வாக அணிய வேண்டும்
  • உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்
  • தண்ணீர் அல்லது பழச்சாறுகளைக் குடிக்க வேண்டும்
  • மசாலா மற்றும் காஃபின் நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்
  • காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்
  • அக்குள்களை மென்மையான சோப்பு அல்லது Body Wash மூலம் கழுவி பேக்டீரிய தொற்றைக் கட்டுப்படுத்தலாம்
  • வியர்வையைக் கட்டுப்படுத்தும் வியர்வை எதிர்ப்பு ஸ்ப்ரேகளை உபயோகிக்கலாம்
  • antiperspirants-சை காலையில் பயன்படுத்துவதை விட இரவில் பயன்படுத்துவது சிறந்தது
  • மன அழுத்தம் மற்றும் படபடப்பு காரணமாக வியர்வை அதிகம் வரலாம் அதை கட்டுப்படுத்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்
  • வியர்வையை உரிஞ்சும் sweat-absorbing pads or liner-களை பயன்படுத்தலாம்

இவை அனைத்தையும் தாண்டி உங்களுக்குத் தொடர்ந்து வியர்வை இருந்தால், ஒரு சிறந்த சுகாதார நிபுணரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் வழங்கும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

இதையும் படிங்க:பிரியாணி மட்டும் இல்லை... ஹலீமுக்கும் ஃபேமஸ் ஹைதராபாத் தான்! - Hyderabad Is Famous For Haleem

ABOUT THE AUTHOR

...view details