ஹைதராபாத்:நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்திப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதாகவும், அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டு நியூட்ரிஷன் ரிசர்ச் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தினமும் இரண்டு அத்திப்பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, அத்திப்பழத்தை உட்கொள்வதால் இதயக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
தினசரி எத்தனை அத்திப்பழம் எடுத்துக்கொள்ளலாம்? ஊறவைத்து சாப்பிட்டால் நன்மையா? முழு பயன்களையும் பெற எப்படி சாப்பிட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்..
மலச்சிக்கல்: மலச்சிக்கல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தீர்வாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இரண்டு ஊறவைத்த அத்திப்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவை குடல் இயக்கங்களைச் சரிசெய்து மலச்சிக்கலைப் போக்குகிறது.
உடல் எடையை குறைக்க உதவும்: உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது. அந்த வகையில், அத்திப்பழத்தில் காணப்படும் ஏராளமான நார்ச்சத்து உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த உணவு என்கின்றனர். காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அளவுக்கு மீறி எடுத்தால், உடல் எடை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.