ஃபேபேசியன் எனும் தாவர குடும்பத்தை சேர்ந்தது தான் பச்சை பட்டாணி. துருக்கி மற்றும் ஈராக்கில் மட்டும் அதிகம் சாகுப்படி செய்யப்பட்ட பச்சை பட்டாணி தற்போது உலகமெங்கும் பயிரிடப்பட்டு விளைவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் பச்சை பட்டாணி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? உடல் எடை இழப்பிற்கு பச்சை பட்டாணி எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பச்சை பட்டாணி தரும் நன்மைகள்:
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது
- கண் பார்வை மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
- கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
- இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது
- பச்சை பட்டாணியில் பாஸ்பரஸ் சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. வெண்டைக்காயை விட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சை பட்டாணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது
- பட்டாணியில் பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக NCBI தெரிவித்துள்ளது.
- பச்சை பட்டாணியில் உள்ள சபோனின், புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பச்சை பட்டாணி:
புரதம் மற்றும் நார்ச்சத்து:பச்சை பட்டாணியில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை வேகவைத்த பச்சை பட்டாணி சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை குறைகிறது. அரை கப் பச்சைப் பட்டாணியில் 5 கிராம் புரதம் உள்ளது.
குறைவான கலோரி: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பட்டாணி சிறந்த தேர்வாக இருக்கிறது. இதில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறைக்கவும், எடையை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது.