ETV Bharat / entertainment

”ஆடியன்ஸ சும்மா கதறவிடணும்” - வைரலாகும் 'டிராகன்' பட இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ! - DRAGON DREAM SONG PROMO

Dragon second single Promo: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'வழித்துணையே' பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது

Dream song Poster
Dream song Poster (Credits - @Ags_production X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 12 hours ago

சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'வழித்துணையே' ப்ரோமோ வெளியாகியுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிராகன்(Dragon)’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தை தானே இயக்கி, நடித்தார். இப்படம் மூலம் இளைஞர்களுக்கு பிடித்தமான கதாநாயகனாக மாறிய பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக லியோன் ஜேம்ஸ் இசையில் டிராகன் படத்தின் முதல் பாடல் ‘the rise of dragon’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலில் கௌதம் மேனன் பிரதீப் ரங்கநாதனுடம் குத்தாட்டம் போட்டது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிராகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘வழித்துணையே’ (dream song) ப்ரோமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்த ப்ரோமோவில் இயக்குநர் அஷ்வத், பிரதீப் ரங்கநாதன், நடிகை கயடு லோகர் ஆகியோர் வெளிநாட்டில் சென்று படப்பிடிப்பு நடத்துவது குறித்து பேசுகின்றனர்.

“வெளிநாட்டுல வந்து இந்த படத்தை எடுக்கறோம், நாம ஏன் டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பக் கூடாது” என பிரதீப், அஷ்வத்தை கேட்கிறார். இதற்கு அஷ்வத், "டிராகன் என்ன எல்லாரும் கைதட்டி பார்க்கற படமா, ஆடியன்ஸ் எல்லாம் கதறனும்" என கலாய்க்கிறார். இதன்பின் ”ஆஸ்கர் எல்லாம் கனவோடு நிறுத்திக்கனும், ஆடியன்ஸ் படத்தை கொண்டாடனும்” என அஷ்வத் கூறுகிறார்.

இதையும் படிங்க: கோடை விடுமுறைக்கு வெளியாகும் சூர்யாவின் ’ரெட்ரோ’... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! - RETRO RELEASE DATE

இந்த கலகலப்பான ப்ரோமோ வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது படங்களின் ப்ரமோஷன் வீடியோக்களை கலகலப்பாக தன்னைத் தானே கலாய்த்து கொள்ளும் வகையில் வெளியீட்டு வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் இந்த வீடியோவும் அமைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.