ஹைதராபாத்:சமீபகாலமாக நாம் சாப்பிட போலாமா? என்ற டிரண்ட் மாறி சமைச்சு சாப்பிடலாமா? என ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி வருகிறோம். இந்த வகையில் நாம் சமைத்து சாப்பிடும் காய்கறி, இறைச்சியில் இருக்கும் ஆரோக்கிய போஸாக்களை அறிந்து அவற்றை செய்து சாப்பிடுவதில் பிஸியாக இருக்கும் தருணத்தில் கேஸ் அடுப்பை பயன்படுத்துவதினாலேயே உயிருக்கு ஊறு விளைவிக்கும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
வகை வகையாக, அறுசுவையிலும் சமைக்கும் ஆர்வமுடைய நமக்கு, அவற்றை “லோ ஃப்லேமில்” சமைக்கதான் நேரமில்லை. பொதுவாக அன்றைய தினத்தின் பரபரப்பில் சமையல் ஒரு அவசர வேலையாக மாறிவிட்டது. இந்நிலையில் நாம் Gas சிலிண்டரின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
சிலிண்டரில் இருந்த அடுப்புக்கு Fire எப்படி வருகிறது?இந்தியாவில் நாம் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயை (LPG) சிலிண்டரில் நிரப்பி அவற்றை எரிபொருளாக பயன்படுத்துகிறோம்.
இந்த LPG என்பது பியூட்டேன் மற்றும் புரொப்பேன் ஆகிய எரிய கூடிய வாயுகளின் கலவையாகும். 2022 தரவுபடி பார்த்தால் இந்தியாவில் சுமார் 89% நகர்ப்புற வீடுகளில் LPG யை முதன்மையான சமையல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த LPG வகை அடுப்புகளை நாம் பயன்படுத்துபோது அதிலிருந்து கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைட், பென்சீன், நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு வெளியேறுகின்றன. இதனால் வீடுக்குள் போதுமான காற்றோட்டம் இல்லையென்றால் குழந்தைகளுக்கு விரைவில் ஆஸ்துமா அல்லது நுரையீரல் நோய் போன்ற சுவாச நோய்களை ஏற்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க நாடுகளில் விவாதம் எழுந்துள்ளது.
அப்போ விறகு அடுப்பு நல்லதா? இந்தியாவை பொறுத்தவரை விறகு அடுப்புதான் முதலில் பயன்பாட்டில் இருந்தது. இன்றும் பல வீடுகளில் முக்கியமாக ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள கிராமங்களில் 'சுல்ஹா' எனப்படும் விறகு அடுப்பைதான் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து பேசிய டாக்டர் திரத்ரம் கௌசிக் கூறுகையில், “இவர்கள் கரி, சாணம் மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பொருளாக வைத்துள்ளனர். இந்த எரிப்பொருள்களில் இருந்து அதிகபடியான புகை வெளியேறுகி்றது. இது நிச்சியம் ஒருவருக்கு மூச்சுத்திணறல், இருமல், கண் தொற்று, தலைவலி மற்றும் அசௌகரியம் ஏற்பட செய்கிறது. தொடர்ந்து காற்றோட்டம் போதுமான அளவு இல்லாத வீட்டுக்குள் இவ்வாறு சமைப்பதால் மீளமுடியாத நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) ஏற்படலாம்" என மருத்துவர் எச்சரிக்கிறார்.
இதையும் படிங்க:பால் குடிப்பதால் 8 வயதிலே பூப்படையும் பெண்கள்? மரபணு மாற்றத்தால் இப்படிப்பட்ட விளைவுகளா?
புகையை வெளியேற்றும் Fan பயன்படுத்தலாமே?:பிரத்யேக விசிறிகள் புகையை விரைவில் வெளியேற்ற கூடியவை. இதுகுறித்து வெளிவந்த ஹார்வர்டு பல்கலைகழகத்தின் ஆய்வுபடி, இந்த வெளியேற்றும் விசிறிகள் காற்றை விரைவில் வெளியேற்றினாலும் நாசிக்கு கேடாக அமையும் நைட்ரஜன் ஆக்சைடை இந்த விசிறிகள் அகற்றுவதில்லை. இதனால் பலர் தங்களை அறியாமல் பிற்காலத்தில் நுரையீரல் பாதிப்புக்களுக்கு ஆளாவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹைய் FLAME! ஹைய் RISK of கேன்சர்:மேலும் LPG அடுப்பில் அவசரமாக அதிக நெருப்பில் சமைக்கும்போது, அதுவே உயிர்க்கொல்லியாக மாறுவதாக வொக்கார்ட் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் திரத்ரம் கௌசிக் கூறுகிறார். அவர் கூறுகையில், “ஆராய்ச்சியின்படி அதிக வெப்பநிலையில் சமைக்கும்போது carcinogens எனப்படும் புற்றுநோய்யின் மூல காரணிகள் உருவாகின்றன. இவற்றை நாம் சாப்பிடுவதால் நமது உடம்பில் இருக்கும் டிஎன்ஏவை (DNA ) மாற்றம் பெற செய்கிறது. பின் இதன் விளைவாக புற்றுநோய் ஏற்படுகிறது.
அபாய முத்திரை தரும் உலக நாடுகள்: கலிஃபோர்னியாவில் ஏற்கனவே இந்த LPG அடுப்புகள் குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் பகிரப்பட்டும், பரபரப்பான முடிவுகள் எடுக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் முடிவுக்குள் கலிஃபோர்னியா நாடாளுமன்றத்தில் LPG அடுப்புகளை மிக அபாயகரமான பொருளாக முத்திரை பதிவுச்செய்யப்படும் சட்டம் இயற்றப்பட உள்ளது. இதையடுத்தை புகையிலை போல் LPG அடுப்புகளிலும் "உயிரை குடிக்கும் ஆபத்தானது" என்ற முத்திரை பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலை உருவாகும். மேலும் இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவின் முதன்மை நீதிமன்றத்தில் வழக்காக பரபரப்பான களத்தில் வாதிடப்பட்டு வரும் சூழலில் அங்கும் இதுகுறித்து முக்கிய சட்டம் இயற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்