தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் உங்கள் தைராய்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும்..நிபுணர் பரிந்துரை!

தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க நிபுணர் சுசரிதா சென்குப்தா பரிந்துரைக்கும் 5 சூப்பர் ஃபுட்ஸ்கள் என்னென்ன? தெரிந்து கொள்ளலாம் இந்த செய்தி தொகுப்பில்..

By ETV Bharat Health Team

Published : 5 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

தைராய்டு பிரச்சனைகள் இந்த நாட்களில் பொதுவானதாகிவிட்டது. கழுத்தில் சிறிய பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள இந்த சுரப்பியில் இருந்து, ஹார்மோனின் சுரப்பு குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால் தைராய்டு ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இந்நிலையில், உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் தைராய்டைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுசரிதா சென்குப்தா. அவர், பரிந்துரைக்கும் 5 சூப்பர் ஃபுட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

பிரேசில் நட்: தைராய்டுக்கு மிகவும் பயனுள்ள மூலப்பொருளாக இருப்பது பிரேசில் நட். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை பிரேசில் நட் சாப்பிட்டு வருவதால் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த பருப்பை தொடர்ந்து உட்கொள்வதால், தலை, கழுத்து, கல்லீரல், மார்பகம், உணவுக்குழாய், தோல், புரோஸ்டேட், பெருங்குடல், நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் இரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

தேங்காய்: பச்சை தேங்காயை உட்கொள்வது தைராய்டு பிரச்சனைகளை குறைக்க உதவியாக இருக்கிறது. இதற்கு நீங்கள் உணவில் எந்த வடிவத்திலும் தேங்காயை சேர்க்கலாம். இதை பச்சையாகவோ அல்லது சட்னியாகவோ அல்லது லட்டுவாகவோ செய்து சாப்பிடலாம். தேங்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

நெல்லிக்காய்: வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை உட்கொள்வது தைராய்டுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல்லிக்காய் பொடியை தேனுடன் சாப்பிடுவது அல்லது வெதுவெதுப்பான நீரில் நெல்லிக்காய் சாற்றை காலையில் குடிப்பதால் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இதையும் படிங்க:தைராய்டு நோய் என்றால் என்ன? - பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி? விளக்குகிறார் மருத்துவர் நிவேதா ஸ்ரீவத்சா!

ஆப்பிள்கள்: பெக்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்களை தவறாமல் உட்கொள்ளும் போது உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குகிறது. இது தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கிறது.

முட்டை: தினசரி முட்டை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முட்டையில் உள்ள டிரிப்டோபன் மற்றும் டைரோசின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், செலினியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அயோடின் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

பூசணி விதைகள்: ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவதால் தைராய்டு கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர். காரணம், பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.

இதையும் படிங்க:மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பா? தைராய்டு அறிகுறியாக கூட இருக்கலாம்..உடனே செக் பண்ணுங்க!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details