நார்ச்சத்து என்றால்?: இரைப்பை மற்றும் சிறுகுடலால் ஜீரணமாகாத ஒருவகையான கார்போஹைட்ரேட் தான் நார்ச்சத்து என்றழைக்கப்படுகிறது. நார்ச்சத்து, மலக்கழிவுகள் இறுக்கமடைவதை தடுப்பதோடு, பெருங்குடலில் உள்ள நீரை உறிஞ்சி மலத்தை மிருதுவாக மாற்றி எளிதில் வெளியேற்ற உதவி செய்யும். இதனால், நார்ச்சத்தை இயற்கை மலமிளக்கி (Natural Laxatives) என்பார்கள். இந்நிலையில், மலச்சிக்கலை போக்கக்கூடிய உணவுகள் என்ன? உணவுகளில் இருக்கும் நார்ச்சத்து அளவுகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்:
காய்கறி | அளவு | நார்ச்சத்து |
வெண்டைக்காய் | 100 கி | 3.3 கி |
கோவக்காய் | 100 கி | 2.5 கி |
கொத்தவரங்காய்/சீனி அவரைக்காய் | 100 கி | 5.7 கி |
வாழைக்காய் | 100 கி | 3.5 கி |
வாழைத்தண்டு | 100 கி | 2.2 கி |
கத்திரிக்காய் | 100 கி | 6.3 கி |
பாகற்காய் | 100 கி | 4.3 கி |
அவரைக்காய் | 100 கி | 8.9 கி |
முருங்கைக்காய் | 100 கி | 5.8 கி |
கேரட் | 100 கி | 4.4 கி |
பீட்ரூட் | 100 கி | 3.5 கி |
சர்க்கரைவள்ளி கிழங்கு | 100 கி | 3.9 கி |
பச்சை பட்டாணி | 100 கி | 8.6 கி |
மேலும், அனைத்து வகையான கீரை வகைகளிலும், குறிப்பாக, 100 கிராம் முருங்கைக்கீரையில் 9 கிராம் உள்ளது.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள்:
பழங்கள் | அளவு | நார்ச்சத்து |
கொய்யாப்பழம் | 100 கி | 8.5 கி |
ஆப்பிள் | 100 கி | 3.2 கி |
பப்பாளி பழம் | 100 கி | 2.6 கி |
பேரிக்காய் | 100 கி | 4.3 கி |
மாம்பழம் | 100 கி | 2.0 கி |
பலாப்பழம் | 100 கி | 3.5 கி |
வாழைப்பழம் | 100 கி | 1.8 கி |
சப்போட்டா | 100 கி | 11 கி |
சீதாப்பழம் | 100 கி | 5.5 கி |
பயர் மற்றும் பருப்பு வகைகள்:
பயறு மற்றும் பருப்பு | அளவு | நார்ச்சத்து |
கருப்பு கொண்டைக்கடலை | 100 கி | 28.3 கிராம் |
கருப்பு உளுந்து | 100 கி | 20 கி |
பச்சைப்பயறு | 100 கி | 17 கி |
காராமணி | 100 கி | 10 கி |
துவரம் பருப்பு | 100 கி | 10.3 கி |
நட்ஸ்:
நட்ஸ் | அளவு | நார்ச்சத்து |
பாதாம் | 100 கி | 13.06 கி |
வேர்க்கடலை | 100 கி | 11 கி |