ETV Bharat / sports

IPL Auction: சென்னை அணியில் மீண்டும் அஸ்வின்! வேற யார்ரெல்லாம் இருக்காங்க தெரியுமா? - ASHWIN IN CSK

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு போன வீரர்கள் மற்றும் அன்சோல்டு ஆன வீரர்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Representative Image (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 24, 2024, 7:50 PM IST

ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. எந்த ஐபிஎல் ஏலத்திலும் இல்லாத வகையில் நடப்பு மெகா ஏலத்தில் பல்வேறு ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

சென்னை அணி தேர்ந்தெடுத்து வீரர்களை ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து வீரர்கள் டிவான் கான்வாய் 6 கோடி 25 லட்ச ரூபாய்க்கும், ரச்சின் ரவிந்திரா 4 கோடி ரூபாய்க்கு சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னை அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வினை 9 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டேவிட் வார்னர் அதிர்ச்சி அளிக்கும் அன்சோல்டு வீரர் ஆனார். டேவிட் வார்னரை எந்த அணியும் விலை கொடுத்த வாங்க முன்வரவில்லை. அதேபோல் இந்திய வீரர் தேவதூத் படிக்கலும் அன்சோல்டு வீரரானார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் தேவதூத் படிக்கலை எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார். அதேநேரம் எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் உள்ளூர் வீரர் வெங்கடேஷ் ஐயர் 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வெங்கடேஷ் ஐயர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர், அவரை 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணி தக்கவைத்தது அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் 6 கோடியே 30 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அதேநேரம் இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜானி பெர்ஸ்டோவ் அன்சோல்டு வீரரானார்.

இதையும் படிங்க: IPL Auction 2025: சோல்டு, அன்சோல்டு வீரர்களின் முழுப் பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.