தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில், பலரும் தினசரி சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தூக்கம். தூங்குவதற்கு நேரம் கிடைத்தும் பல்வேறு காரணங்களால் தூங்க முடியாமல் சிரமம்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். நான்கு சுவர்களுக்குள் தூங்கும் நமக்கே இப்படி ஒரு பிரச்சனை என்றால், எல்லையில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் ராணுவ வீரர்களின் நிலை என்ன என்பதை யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
எந்த மாதிரியான சுற்றுசூழலிலும், சத்தத்திலும் கூட ராணுவத்தினர் படுத்ததும் தூங்கி விடுவார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ராணுவ வீரர்களை நொடிப்பொழுதில் தூங்க வைக்க ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் 'மிலிட்டரி ஸ்லீப்பிங் மெத்தட்'(MILITARY SLEEPING METHOD).
இந்த முறையை கடைபிடித்தால் இரண்டே நிமிடங்களில் எளிதாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தூக்கக் கோளாறுகளை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரையன், இந்த ராணுவ தூக்க முறை சிறந்த பலனைத் தருவதாகவும் விளக்குகிறார். 2017 ஆம் ஆண்டில் National Center for Complementary and Integrative Health இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் "இராணுவப் பணியாளர்களுக்கான தூக்கம் மற்றும் தளர்வு நுட்பங்கள்" குறித்து கண்டறியப்பட்டது.
மிலிட்டரி ஸ்லீப்பிங் மெத்தட் என்றால்?..இந்த இராணுவ உறக்க வித்தையின்படி முதலில் கண்களை மூடி இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு மெதுவாக சுவாசிக்கவும். சுவாத்தை கவணித்து கொண்டே, தலை, கண், முகம், தோள்கள் தொடங்கி கால்களை தளர்த்தவும். அதன் பிறகு, மனதை ஒரு கற்பனை உலகிற்கு கொண்டு செல்ல வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.