தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

செயற்கை கருத்தரிப்பில் கிராமப்புற பெண்கள்.. நிபுணர்கள் கூறுவது என்ன? - In vitro fertilization

IVF in rural videos: 35 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் செயற்கை கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்வதாகநிபுணர்கள் கூறுகின்றனர்.

செயற்கை கருத்தரிப்பு
செயற்கை கருத்தரிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 4:48 PM IST

சென்னை: செயற்கை கருத்தரிப்பில் பல முறைகள் இருந்தாலும், IVF எனப்படும் இன் - விட்ரோ முறையில் கருத்தரிப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. இயற்கையாகவே கருத்தரிக்க முடியாமல், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகள் வரப்பிரசாதமாக உள்ளது. இதில் IVF (In vitro fertilization) என்பது மிகவும் பிரபலமான முறையாகும்.

செயற்கை கருத்தரிப்பு என்றால் என்ன?இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது செயற்கை கருத்தரிப்பு முறை என்று கூறப்படுகிறது. இம்முறையில், பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து, ஆய்வக சூழலில் வளர வைத்து, அதில் விந்தணுக்களைச் செலுத்தி, அவை கருவாக உருவான பிறகு, அந்தக் கருவை Intra Uterine Insemination எனப்படும் உயிரியல் தாய் அல்லது வாடகைத்தாயின் கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது.

எதற்காக செயற்கை கருத்தரிப்பு:இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்கள், கருப்பை குழாயில் அடைப்பு, கருப்பை குழாயில் நீர்கோர்ப்பது, கருப்பையை சுற்றியுள்ள இடத்தில் அதிகமாக நோய்தொற்று அதாவது எண்டோமெட்ரியோஸிஸ் ஆகியவை இருந்தால் கரு முட்டைகள் கருப்பைகள் சரியாக சென்று சேறுவதில்லை. இந்த மாதிரியான நிலை உள்ளவர்கள் ஐவிஎஃப் உள்ளிட்ட செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிகிறது.

நிபுணர்கள் கூறுவது என்ன?இது குறித்து பெங்களூரு நோவா செயற்கை கருத்தரிப்பு ஆலோசகர் பல்லவி பிரசாத் கூறுகையில், "பொதுவாக 35 முதல் 40 வயதிற்கு மேல் அல்லது 45 வயதிற்கு மேற்பட்ட கிராமப்புற பெண்கள் அதிகளவில் செயற்கை கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். பெரும்பாலனோர் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு நகர்ப்புற மையங்களுக்கு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

வல்லுநர்களின் கூற்றுப்படி, செயற்கை கருத்தரிப்பு முறையில், முதல் முறையிலேயே கரு உருவாகிவிடாது. பல முறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தாய்மை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் நிபுணர் பிரியங்கா ரெட்டி கூறுகையில், "செயற்கை கருத்தரிப்பில் 27 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

சமூக விதிமுறைகள் மற்றும் வயது ஆகிய தடைகளை உடைத்து, தற்போது இந்திய கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் செயற்கை கருத்தரிப்பு(ஐவிஎஃப்) சிகிச்சையை மேற்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் கவுருக்கு (58) செயற்கை கருத்தரிப்பு (IVF) மூலம் குழந்தை பிறக்க உள்ளது.

செயற்கை கருத்தரிப்பு பாதுகாப்பானதா?:இம்முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செயற்கை கருத்தரிப்பு வெற்றிபெற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை தேவைப்படலாம். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் ஹார்மோன் ஊசிகள் அதிக அளவில் செலுத்தப்படுகிறது. இதனால் பக்கவிளைவுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாடகைத்தாய் மற்றும் ART சட்டத்தின்படி, இந்தியாவில் 21 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும்.

பெண்ணுக்கு கருமுட்டையை உற்பத்தி செய்யும் திறன் குறைவாக இருக்கிறது என்றால் அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையை பயன்படுத்த முடிவதில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஐவிஎஃப்-ல் கருமுட்டை சேகரிப்பது முதல் கருப்பையில் கருவை வைத்து அது வளரத் துவங்குவது வரையில் பாதுகாப்பான முறையில் பராமரித்தல் வேண்டும்.

இதையும் படிங்க:எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? - முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details