ஜோத்பூர் (ராஜஸ்தான்): மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் இருந்து 3 கிலோ முடி அகற்றப்பட்டுள்ளது. மதுரதாஸை சேர்ந்த 28 வயது பெண் கடுமையான வயிற்று வலி காரணமான மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் கொத்து கொத்தாக முடி இருப்பதை எண்டோஸ்கோப்பி மூலம் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில், பெண்ணிற்கு உடணடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வயிற்றில் இருந்த முடியை அகற்றினர். அதே சமயம், 'அந்த பெண்ணுக்கு முடி உண்ணும் பழக்கம் இருந்ததும், பெண்ணின் தலையில் குறைவான முடிகள் மட்டுமே இருந்தது' என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும், அப்பெண் பசியிண்மை, வாந்தி, சட்டென எடை குறைவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், ஆனால் முழுமையான உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில், முடியை சாப்பிட வேண்டிய அவசியம் என்ன? எதற்காக முடியை சாப்பிட்டார் என பல கேள்விகள் எழுந்த நிலையில், முடி உண்ணும் நோயை பற்றி விவரிக்கிறார் மருத்துவர் தினேஷ் தத் ஷர்மா.