சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, மக்கள் அன்றாட வேலைகளைச் சரிவரச் செய்ய முடியாத சூழலில் தவித்து வருகின்றனர். வெயில் காரணமாகப் பூமி எந்த அளவுக்கு வெப்பம் அடைகிறதோ அதேபோல், மனிதர்களின் உடலும் அதீத சூட்டை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கு இடையே உடற்பயிற்சி செய்தால், உடல் மேலும் சூடாகும் எனவும் மிகவும் எளிதான, கோடைக்காலத்திற்கு உகந்த, உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ஹன்சாஜி யோகேந்த்ரா தெரிவித்துள்ளார்.
1. கோடைக்கால உடற்பயிற்சிகள்
- பிராணயாமத்தில் மேற்கொள்ள வேண்டியவை
- சீடாலி
- சிட்காரி
- சந்த்ரபேதன்
- சந்திரநாடி
- சூரியநாடி
- யோகாசனத்தில் மேற்கொள்ள வேண்டியவை
- யஸ்டிகாசனா
- பத்ராசனா
- மட்யாசனா
- பர்யன்காசனா
- ஹஸ்ட்பட் அங்குஷ்தாசனா
- சுப்ட வக்ராசனா
- மன அமைதி தரும் உடற்பயிற்சிகள்
- சூர்ய நமஸ்காரம்
- நடை பயிற்சி
- நீச்சல்
2. கோடையில் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்
- உடல் சோர்வாக இருப்பதை உணர்ந்தால் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்
- வெய்ட் லிஃப்டிங்
- ரன்னிங்
- ஜம்பிங்
- புஷ்ஷப்
3. உடற்பயிற்சியின்போது உடை அணிவதில் கவனம் தேவை
உடற்பயிற்சியின்போது இருக்கமான ஆடைகள் அணிவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
காட்டன் துணியால் ஆன வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
4. உடற்பயிற்சிக்கான நேரம்
- காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கட்டாயம் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
- முடிந்தவரை அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது.
- அதாவது காலை 6 மணி முதல் 9 மணிக்குள் உடற்பயிற்சியை முடிக்க வேண்டும்.
- அல்லது இரவு 7 முதல் 8 மணிக்குள் முடிக்க வேண்டும்.
இதையெல்லாம் கடந்து கோடை வந்தாலே பலருக்கு கோவமும் சேர்ந்து வந்துவிடும். இதனால் பல வீடுகளில் சண்டை சச்சரவுகளுக்குப் பஞ்சமே இருக்காது. இதற்கான காரணம் என்னவென்றால், உடல் சூடு காரணமாகவும், அமைதியான மனநிலை இல்லாத காரணத்தாலும் பலருக்கு எரிச்சல் ஏற்படும்.
இதன் விளைவாக கோவம் கொள்வார்கள் இதைக் கட்டுப்படுத்தி மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் பெற, சரியான உணவு, சரியான நீராகாரம், சரியான உடற்பயிற்சி, சரியான ஓய்வு, சரியான உறக்கம், இதை மேற்கொண்டால் கோடை கோவத்தில் வீட்டில் வரும் சண்டைகளைத் தவிர்த்து மனதையும், சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியாக வைக்கலாம் என்கிறார் மருத்துவர் ஹன்சாஜி யோகேந்த்ரா.
இதையும் படிங்க:"சமைத்த உணவு" குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? கூடாதா? - Cooked Food In Refrigerator