சென்னை: பிறந்து 8-ஆம் மாதத்தில் குழந்தைகள் எட்டி வைக்க வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் குழந்தைகள் ஒரு வயதைக் கடந்தும் பலர் நடக்க ஆரம்பிப்பது இல்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பெற்றோர் மற்றும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகளைத் தரையில் இறக்கி விடாமல் தூக்கியே வைத்திருப்பது.
மற்றொன்று சில ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக நடப்பதில் தாமதம் ஏற்படுதல். இதுபோன்ற சூழலில் குழந்தைகளுக்கு நடக்கப் பயிற்சி கொடுக்க வேண்டியது மிக அவசியம். அதேபோல நம் முன்னோர்கள் பின்பற்றிய பாட்டி வைத்தியம் என்று அழைக்கப்படும் அன்றைய வீட்டு வைத்தியம் குறித்துப் பார்க்கலாம். புற்றுமண் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காடுகள் மற்றும் விவசாய நிலங்களின் ஒரு சில பகுதிகளில் கரையான் புற்று இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கரையான் தனக்கான ஒரு வீட்டை அதாவது புற்றைக் கட்ட அதீத திட்டம் தீட்டம்.
இதையும் படிங்க:உங்கள் குழந்தைக்கான பள்ளியை எப்படித் தேர்வு செய்வீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள்! - Healthy Schooling Strong Foundation
இன்றைய கட்டிடக்கலை வல்லுநர்களுக்கு எல்லாம் முன்னோடியான கரையான்கள் குறிப்பிட்ட நிலத்தைத் தேர்வு செய்து, அதில் தனது உடலில் இருந்து வெளியேறும் சில திரவத்தை வைத்து புற்றை உருவாக்கும். அந்த புற்றுமண் மிகவும் அசாத்தியமான மருத்துவ பலன் கொண்டது என இயற்கை மருத்துவமும் கூறுகிறது. இந்த புற்று மண்ணை கொஞ்சம் எடுத்து தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்துவர முகம் பளபளக்கும் எனக்கூறப்படுகிறது.