ஹைதராபாத்:வட இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்த ரொட்டி/புல்கா மற்றும் சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகள் தற்போது தென் இந்தியா மக்களின் உணவிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கோதுமை வகைகளை சாப்பிட பரிந்துரைக்கப்பட்டது தான்.
இதன் காரணமாக, அனைவரது வீடுகளிலும் காலை அல்லது இரவு உணவாக சப்பாத்தி வகைகள் புகுந்து விட்டன. எண்ணெய் உணவுகளை குறைப்பதற்காக சப்பாத்தியை நேரடியாக தீயில் சுட்டு ரொட்டி/புல்காவாக செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால், ரொட்டியை நேரடியான தீயில் சமைப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்கள் உருவாகலாம் என்ற கருத்துகளும் பரவி வருகிறது.
2018 ஆம் ஆண்டு ஃபுட் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ரொட்டி அல்லது எந்த உணவையும் நேரடியாக தீயில் சமைப்பதால் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலையில் உணவு சமைக்கப்படும் போது, அக்ரிலாமைடு, ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCA) மற்றும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) போன்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்கள் உருவாகின்றன.
அதேபோல, இறைச்சியை நேரடியாக கிரில்லில் சமைப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது உண்மையா தானா? என்பது குறித்து டாக்டர் பபிதா பன்சாலை,
"ரொட்டியை நேரடியான சுடரில் சமைப்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், அவ்வாறு செய்வது அபாயகரமான இரசாயனங்கள் உருவாகலாம் என்று சில சான்றுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அக்ரிலாமைடு, PAHகள் மற்றும் HCAகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது" என்றார்
நேரடி தீயில் ரொட்டியை சமைப்பதால் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயங்களைக் குறைப்பதற்கான உதவிகுறிப்புகள்: