ஹைதராபாத்:பாப்கார்ன் (Popcorn) என்றாலே நினைவுக்கு வருவது திரையரங்கம் தான். அங்குச் செல்லும் போது தான் பலரும் பார்கார்னை ருசித்திருப்போம். பொதுவாகவே, நொறுக்குத் தீனிகளில் கிடைக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என்றாலும் ஜாலியாக சாப்பிடும் பாப்கார்ன் ஆரோக்கியமான ஸ்நாக் ஐட்டம் என்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சுபாங்கி தம்மாழ்வார்!
பல நேரங்களில் நேரத்தை கடத்துவதற்காக நாம் உண்ணும் பாப்கார்னில் கலோரிகள் மிகவும் குறைவு எனவும் கொலஸ்ட்ரால் பயம் இல்லை என்கிறது தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வறிக்கை. மேலும், இதில் நார்ச்சத்துடன் பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளடக்கியுள்ளதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்கிறார் மருத்துவர் சுபாங்கி தம்மாழ்வார்.
"ஆரோக்கியமான தின்பண்டங்களில் பாப்கார்னை சேர்க்கலாம். ஆனால், சீஸ், பட்டர், சால்டட் பாப்கார்னுக்கு பதிலாக, ப்ளைன் பாப்கார்னை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அதிக பலன் கிடைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பாப்கார்னில் பெரும்பாலும் கலோரிகள் குறைவு. காலையில் கூட ஸ்நாக்ஸாக இதை எடுத்துக்கொள்ளலாம்" - டாக்டர் சுபாங்கி தம்மாழ்வார்
பாப்கார்னில் இருக்கும் சத்துக்கள்:
- வைட்டமின் பி
- மாங்கனீசு
- நார்ச்சத்து
- பாலிபீனாலிக் கூறுகள்
- மெக்னீசியம்
- நார்ச்சத்து
பாப்கார்னில் சுவையும், சத்தும் இருக்கிறது என்பதற்காக தற்போது மார்கெட்டில் கிடைக்கும் பல வகையான பாப்கார்ன் பாக்கெட்டுகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பாப்கார்னின் சத்தும் சுவையும் குறையாமல் கிடைப்பதற்கு வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.