சென்னை:காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள பாதி பிரச்சனை சரியாகி விடும் என்கிறது கிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ ஆய்வறிக்கை. இங்கு பலருக்கு காபி அல்லது டீ குடிக்காமல் நாளே தொடங்குவது கிடையாது. அப்படி, தப்பித்தவறி ஒரு நாள் அதனை குடிக்கவில்லை என்றால் இரவு படுக்கைக்கு செல்லும் வரை 'இன்னைக்கு ஒரே தலைவலி' 'டீ குடிக்காமல் நாளே நல்லா இல்லை' என பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இப்படி இருக்க, உண்மையில் நாளை டீ, காபியில் இருந்து தொடங்காமல் இருந்தால் எப்படி இருக்கும்?. நாள் மட்டுமல்லாது உடலும் நன்றாக இருக்கும் என்கிறனர் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்.
அதற்கு பதிலாக,தண்ணீரில் இருந்து தொடங்குவதன்மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்கின்றனர். மனிதன் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ அடித்தளமாக அமைவது நீர். அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. உடல் வெப்பநிலையை சமம் செய்வதிலிருந்து செரிமானத்திற்கு உதவுவது வரை நீர் அனைத்து உடல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது.
மெட்டபாலிசம் பூஸ்டர்: மெட்டபாலிசம் என்று கூறப்படும் வளர்சிதை மாற்றம் மிக மிக முக்கியமானது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் வளர்சிதை மாற்ற விகிதத்தை 30% வரை அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது. நாள் முழுவதும் கலோரிகளை குறைக்க அடித்தளமாக இருக்கிறது. குறிப்பாக, தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் தண்ணீரை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.
செரிமானத்தில் சிக்கல்?:படுக்கையில் இருந்து எழுவது முதல் மீண்டும் படுக்கைக்கு செல்லும் வரை வித விதமாக பலவற்றை நாம் உண்கிறோம். இப்படி இருக்கும் பட்சத்தில் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு உடலை சோர்வடைய செய்கிறது. காலையில் தண்ணீர் குடிப்பதால், அந்த உணவு பொருட்களை உடைத்து செரிமானத்தை வேகப்படுத்தும்.