தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

உங்கள் கிச்சனில் கரப்பான் பூச்சிகள் ஓடி விளையாடுகிறதா? 'இதை' தெளித்தால் மீண்டும் வரவே வராது..! - HOW TO GET RID OF COCKROACHES - HOW TO GET RID OF COCKROACHES

HOW TO GET RID OF COCKROACHES IN KITCHEN: உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் தொல்லையா? எத்தனை விதமான ஸ்ப்ரேகளை பயன்படுத்தினாலும் பயன் இல்லையா? இந்த டிப்ஸ்களை ஒருமுறை செய்து பாருங்கள். இனி, உங்கள் வீட்டு பக்கம் கரப்பான் பூச்சி வரவே வராது..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

By ETV Bharat Health Team

Published : Sep 17, 2024, 3:01 PM IST

ஹைதராபாத்:வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் இரவானால் கிச்சனை கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமித்து விடுகின்றன. இரவில் தண்ணீர் குடிக்கலாம் என்று சமையலைறையில் உள்ள லைட்-ஐ ஆன் செய்தால் போதும் காய்கறி,பாத்திரங்கள் என் அங்கும் இங்குமாய் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருக்கும்.

இவற்றால், நேரடி ஆபத்துக்கள் இல்லை என்றாலும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை கரப்பான்கள் கொண்டுள்ளது. இதனால், நாம் சந்தையில் கிடைக்கும் பல ஸ்ப்ரேக்களை பயன்படுத்தி கரப்பானை விரட்டுகிறோம். அந்த ஸ்ப்ரேக்களால் கரப்பான்கள் வராமல் இருந்தாலும், அதில் உள்ள ரசாயனங்கள் பல உடல்நலப் பிரச்சனைகள் உண்டாக்கும். அதனால் தான், உங்களுக்காக கரப்பான் பூச்சிகளை விரட்ட சில இயற்கை டிப்ஸ்களை கொண்டு வந்திருக்கிறோம்.

சுத்தமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்:கரப்பான் பூச்சிகள் அதிகம் பயன்படுத்தப்படாத மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் கூடு கட்டும். எனவே, அலமாரிகள் மற்றும் கிச்சன் சின்க் பகுதிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மேலும், வீட்டில் இருக்கும் ஓட்டைகள், விரிசல்கள், உடைந்த குழாய்களை முதலில் மூட வேண்டும். இப்படி செய்வதால் கரப்பான் கூடு கட்டுவதை தவிர்க்க முடியும்.

வேம்பு: கரப்பான் பூச்சிகள் அதிகம் நடமாடும் பகுதியில் வேப்பிலைகளை வைக்கவும். இந்த இலைகளை தினமும் மாற்ற வேண்டும். இப்படி செய்வதால், மூன்று நாட்களில் நல்ல மாற்றம் ஏற்படும்.

கரப்பான் பூச்சி முட்டைகளை அழிக்க?: இல்லையென்றால், இரவில் படுக்கும் முன் கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடங்களில் வேப்பப்பொடி அல்லது வேப்ப எண்ணெய் தடவ வேண்டும். மேலும், வேப்ப எண்ணெயில் சிறிது வெந்நீர் சேர்த்து தெளித்தால் கரப்பான் பூச்சி முட்டைகள் அழிந்துவிடும்.

வினிகர்:ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் வினிகரை சம அளவு எடுத்து கலந்துகொள்ளவும். பின்னர், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் இதை தெளிக்கவும். இப்படி செய்வதால், கரப்பான் பூச்சி நடமாட்டம் குறைகிறது.

பேக்கிங் சோடா: கரப்பான் பூச்சிகளைத் தடுக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரையை சம அளவு எடுத்து கலக்கவும். பிறகு, கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் தெளிக்கவும். இதில் உள்ள சர்க்கரை கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும். ஆனால், இக்கலவையை உண்ணும் கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

கிராம்பு:கரப்பான் பூச்சியிலிருந்து விடுபட கிராம்பு சிறந்த வீட்டு வைத்தியம் என்று கூறலாம். இதற்கு அதிக வேளைப்பாடுகள் எதுவும் தேவையில்லை. கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் கிராம்புகளை வைத்தாலே போதும்.

பிரியாணி இலை:பிரியாணி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடங்களில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகளுக்கு இதன் வாசனை பிடிக்காது என்பதால் அவை வீட்டை விட்டு ஓடிவிடுகின்றன.

இது தவிர, மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்து வைக்கவும். இந்த கலவையை கரப்பான் நடமாடும் இடங்களில் தடவினால் அவை ஓடி விடுகின்றன. இல்லையெனில் கரப்பான் பூச்சிகள் அதிகம் உள்ள இடத்தில் ஹேர் ஸ்ப்ரேயை தெளிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதையும் படிங்க:மழைக்காலத்தில் உங்க இரும்பு சமையல் பாத்திரம் துருப்பிடிக்குதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details