தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

சாப்பிட்டவுடன் டீ குடிக்கலாமா? குளிக்கலாமா?..செய்யவே கூடாத 6 விஷயங்கள் இதோ! - Habits to avoid after meals - HABITS TO AVOID AFTER MEALS

Habits to avoid after meals: சாப்பிட்ட பிறகு உடனடியாக நாம் செய்யும் சில செயல்கள் செரிமான செயல்முறையை சீர்குலைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் இந்த செய்தி தொகுப்பில்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)

By ETV Bharat Health Team

Published : Sep 16, 2024, 1:43 PM IST

ஹைதராபாத்: 'ஒரு குட்டி தூக்கம் போட்டால் நல்லா இருக்கும், டீ குடிப்போமா, ஜில்லுன்னு ஏதாவது சாப்பிடனும் போல இருக்கு' என உணவு அருந்தியதும்,பலருக்கும் இந்த மனநிலை வந்துவிடுகிறது. இப்படி, சாப்பிட்டதும் அறியாமல் நாம் செய்யும் சில செயல்கள் பல பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. எப்படிச் சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. தெரிந்து கொள்ளுங்கள்...

சாப்பிட்டதும் தூங்குவதை தவிர்க்கவும்: உணவு உட்கொண்டதும், ஒரு குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என பலரும் நினைப்போம். ஆனால், சாப்பிட்டதும் தூங்குவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இது, உடலில் கொழுப்பு சேர்வதற்கும் எடை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாகிறது. இது தவிர, செரிமான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளிக்க வேண்டாம்: குளிப்பது உடலில் ஒட்டு மொத்த இரத்த ஓட்டத்தையும் மாற்றுகிறது. இதனால், சாப்பிட்டவுடன் குளிக்கும் போது, உணவு எளிதில் செரிமான அடையாமல் சிக்கலை ஏற்படுகிறது. எனவே, சாப்பிடுவதற்கு 1 முதல் நேரத்திற்கு முன்பாகவும், சாப்பிட்டதும் குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு பின்னர் குளிக்க வேண்டும்.

டீ, காபி வேண்டாம்: சாப்பிட்ட உடனேயே டீ, காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இதைத் தவிர்ப்பது நல்லது. இதில் உள்ள சில அமிலங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும்,இது செரிமான செயல்முறையை சீர்குலைப்பதால், சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, சிறிய அளவு டீ மற்றும் காபி அருந்த பரிந்துரைக்கப்படுகிறது. 2000ம் ஆண்டு 'ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், உணவுடன் காபி குடிப்பவர்களுக்கு செரிமானம் அதிக நேரம் எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம்: சாப்பிட்ட உடனேயே நிறைய தண்ணீர் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது செரிமான சக்தியை மோசமாக பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சாப்பிட்ட பிறகு நிறைய தண்ணீர் குடிக்கும்போது, ​​வயிற்றில் உள்ள உணவை ஜீரணிக்க உதவும் என்சைம்கள் மற்றும் செரிமான சாறுகள் வெளியாகும். இது முறையற்ற செரிமானத்தை ஏற்படுத்தும் மற்றும் உடலில் நச்சுத்தன்மையை கணிசமாக அதிகரிக்கும். எனவே சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

புகைபிடித்தல்: உணவருந்திய பின்னர், புகைப்பிடிப்பது பத்து சிகரெட்டுகளுக்கு சமம் என்கின்றனர் நிபுணர்கள். சிகரெட் புகைப்பது செரிமானத்தில் குறுக்கிடுவது மட்டுமல்லாமல் பல்வேறு இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்:பழங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் என்றாலும், உணவுக்கு பின்னர் உடனே பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. உணவுக்குப் பிறகு பழங்களை உண்ணும்போது, ​​அது மற்ற பொருட்களுடன் கலந்து, பழத்தில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகளை உடல் இழக்கிறது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details