தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய அப்டேட்! - Raayan release date - RAAYAN RELEASE DATE

Raayan release date: தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூன் மாத வெளியீட்டில் இருந்து தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 5:20 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என கிடைத்த இடத்தில் எல்லாம் தன் தடத்தை பதித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி இருந்தது. அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது 50வது படத்தை நடித்து தானே இயக்கியுள்ளார் தனுஷ். இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் ராயன் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தனுஷ் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இப்படமும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட படங்கள் அம்மாதம் வெளியாக உள்ளதால், ராயன் படத்தை ஜூலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இளையராஜாவின் பயோபிக் என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ்.

இதையும் படிங்க:“ரஜினிகாந்த் பயோபிக்கில் நடிக்க விரும்பினேன்” - இளையராஜா திரைப்படம் நிகழ்ச்சியில் தனுஷ் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details