தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஸ்டைலிஷ் ரொமான்டிக் திரைப்படம்... 'நேசிப்பாயா' டீசர் வெளியீடு! - Nesippaya teaser - NESIPPAYA TEASER

Nesippaya teaser: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நேசிப்பாயா டீசர் வெளியீடு
நேசிப்பாயா டீசர் வெளியீடு (Credits - @XBFilmCreators X account)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 24, 2024, 4:01 PM IST

சென்னை: XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில், சேவியர் பிரிட்டோ, சிநேகா தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேசிப்பாயா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இன்று நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: லட்டு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு... பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! - karthi apologized for laddu issue

இளைஞர்களை கவரும் வகையில்ஆகாஷ், முரளி ஜோடி புத்துணர்ச்சியுடன் திரையில் தோன்றுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை டீசரில் கவனம் பெற்றது. ரொமான்டிக் ஆக்‌ஷன் படமாக நேசிப்பாயா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் விஷ்ணுவர்தன் கடைசியாக இயக்கி, கடந்த 2021இல் வெளிவந்த ‘ஷேர்ஷா’ திரைப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details