தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

2023ஆம் ஆண்டின் டாப் 1 இடத்தை பிடித்த லியோ! - leo tops in most talked films 2023

Leo in India's Top Films: செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்ட 2023ஆம் ஆண்டு வெளியான பிரபல திரைப்படங்கள் பட்டியலில் ஜவான், சலாரை பின்னுக்குத் தள்ளி லியோ முதலிடம் பிடித்துள்ளது

இந்திய அளவில் 2023ஆம் ஆண்டின் பிரபல திரைப்படங்கள் பட்டியலில் லியோ முதலிடம்
இந்திய அளவில் 2023ஆம் ஆண்டின் பிரபல திரைப்படங்கள் பட்டியலில் லியோ முதலிடம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 4:37 PM IST

சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு, அனைத்து மொழிகளிலும் புதிய சோதனை முயற்சிகளுடன், புதிய கற்பனைகளுடன் கூடிய வித்தியாசமான திரைப்படங்கள் வெளியானது. அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த 10 படங்கள் வரிசையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த லியோ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தை பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் பிடித்துள்ளது. இதனையடுத்து, 3வது மற்றும் 4வது இடங்களை வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் பிடித்துள்ளது. இந்த வரிசையில், 5வது இடத்தை ஜவான் திரைப்படமும், 6வது இடத்தை ஆதிபுரூஷ் திரைப்படமும் பிடித்துள்ளது. 7அது மற்றும் 8வது இடத்தை பதான் மற்றும் டங்கி திரைப்படங்கள் பிடித்துள்ளன.

இந்த வரிசையில் முதலிடம் பிடித்த லியோ திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படம், 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்கள்:காந்தாரா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து.. படப்பிடிப்பில் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details