தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"கருத்து சொல்லலாம், வன்மத்தை கக்க கூடாது"... எலிமினேட் ஆன ஆர்னவை எச்சரித்த விஜய் சேதுபதி! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8 Tamil: ஜாக்குலின், தர்ஷாவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி, ஆர்னவுக்கு எச்சரிக்கை என பிக்பாஸ் இரண்டாவது வாரம் கலகலப்பாக முடிந்தது

எலிமினேட் ஆன ஆர்னவை எச்சரித்த விஜய் சேதுபதி
எலிமினேட் ஆன ஆர்னவை எச்சரித்த விஜய் சேதுபதி (Credits - vijay sethupathi X Page, arnaavactor Instagram Account,)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 21, 2024, 11:00 AM IST

சென்னை: வார இறுதியில் அன்ஷிதா, சாச்சனா இடையே ஏற்பட்ட சம்மந்தி பிரச்சனையால் பிக்பாஸ் வீடே ரணகளம் ஆன நிலையில், ஒரு வழியாக விஜய் சேதுபதி அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக ஜாக்குலினுக்கு விதிகளை மீறியதாக தண்டனை கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது ஜாக்குலினுக்கு, தர்ஷிகாவும் ஆதரவாக இருந்த நிலையில், ஜாக்குலின் ஆண்கள் அணியினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு விஜய் சேதுபதியின் விசாரணையில், ஜாக்குலின் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார். ”நான் காலை முதல், டார்கெட் செய்யப்பட்டேன்” என ஜாக்குலின் கூறியதற்கு, ”விதிமுறையை மீறி ஆண்கள் அணியின் பொருட்களை எடுத்தால் தண்டனை கொடுப்பாங்க, அதை செஞ்சு தான் ஆகணும், நீங்க நினைக்கிற மாதிரி பிக்பாஸ் வீட்ல யாரும் இருக்கமாட்டாங்க” என கடிந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தர்ஷா பக்கம் வந்த விஜய் சேதுபதி, ”எதுவா இருந்தாலும் கதையா இழுத்து சொல்லாதிங்க, ஷார்ப்பா பேசுங்க” என்றார். ஆர்னவ் தான் ஆண்கள் அணியை மனரீதியாக டார்ச்சர் செய்ததாக தர்ஷா கூறியுள்ளார் என குற்றம்சாட்டினார். இது குறித்து தர்ஷாவிடம் விஜய் சேதுபதி கேட்ட போது, தர்ஷா “சொன்ன மாதிரி தான் இருக்கிறது” என குழப்பமாக ஆடு திருடு போன மாதிரி இருக்கு என்ற மோடில் பதில் கூறினார்.

அப்போது விஜய் சேதுபதி, "சொன்னீங்களா? இல்லையா? என மட்டும் சொல்லுங்கள் என கடுமையாக பேசினார். அப்போதும் தர்ஷா குழப்பிய நிலையில், வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளலாம் என விஜய் சேதுபதி முடித்து வைத்தார். பின்னர் அனைவரும் எதிர்பார்த்த நாமினேஷன், முதலில் தீபக், ஜாக்குலின், ரஞ்சித் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.

கடைசி லிஸ்டில் முத்துக்குமரன், ஆர்னவ் ஆகியோர் இருந்த நிலையில், இந்த விஷயத்தையும் உடனே முடித்து விடுவோம் என ஆர்னவை வெளியே வர சொன்னார் விஜய் சேதுபதி. வீட்டில் உள்ள அருண், விஷால் ஆகியோரின் மீது இருந்த கோபத்தை பிக்பாஸ் கோப்பை மீது காண்பித்த ஆர்னவ், கோப்பையை சிதறுதேங்காய் போல் போட்டு உடைத்தார். இதன்பின் வெளியே வந்த ஆர்னவிடம் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பற்றி கூறுங்கள் என்றார்.

அப்போது ஆர்னவ் சக போட்டியாளர்கள் மீது இது தான் சாக்கென்று வறுத்தெடுத்தார். சத்யா, அருண் மீது இருந்த கோபத்தை கொட்டி தீர்த்தார். "ஜால்ராஸ், சத்யா, விஷால், அருண், தீபக் என ஆர்னவின் பேச்சு எல்லை மீறி சென்றது. அப்போது விஜய் சேதுபதி குறுக்கிட்டு நிறுத்தினார். ஆர்னவிடம், “உங்களை கருத்து தான் சொல்ல சொன்னோம், வன்மத்த கக்கக் கூடாது. மரியாதையாக பேச வேண்டும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க: "படைப்பு சுதந்திரத்துடன் ஒரு படம் வெளியாவது மிக முக்கியம்" - 'வேட்டையன்' இயக்குநர் ஞானவேல் பேச்சு!

இதுவரை எலிமினேட் ஆன இருவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில், பிக்பாஸ் இந்த வாரம் அணி பாரபட்சம் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யலாம் என கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருந்த ஆர்னவ் வெளியேறிய பிறகாவது சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details