சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான கதாபாத்திர தேர்வு மூலம் பிரபலமடைந்து பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் குரங்கு பொம்மை படத்தை இயக்கி பிரபலமடைந்த நித்திலன் சுவாமிநாதன், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். மகாராஜா விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.
இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யாப், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.40 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "படத்தின் மீது பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தது, அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த படத்தில் அதை சரி செய்து கொள்கிறேன் என்றவர் சிங்கம்புலியை படத்தில் நடிக்க வைப்பதற்கே பல சிரமங்களை சந்தித்தேன். அவரிடம் கெஞ்சி தான் இந்த படத்தில் நடிக்க வைத்தேன் என்றார்.