தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கோட்' படம் பார்க்க வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்கள்; ரோகிணி திரையரங்கில் களைகட்டிய கொண்டாட்டம்! - GOAT rohini theatre celebration - GOAT ROHINI THEATRE CELEBRATION

GOAT rohini theatre celebration: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோகிணி திரையரங்கில் களைகட்டிய கோட் கொண்டாட்டம்
ரோகிணி திரையரங்கில் களைகட்டிய கோட் கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 2:28 PM IST

Updated : Sep 5, 2024, 6:19 PM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியான கோட் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், இனி ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளதால் ’கோட்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதனால் படத்தின் டிக்கெட்டிற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் கோட் பட டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

இன்று கோட் படம் வெளியான நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் செய்தும் கொண்டாடினர். கோட் படம் பார்க்க வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்களில் ஒருவர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், நாங்கள் கோட் படத்தின் டிரெய்லர், பாடல் எதுவும் பார்க்கவில்லை. நேராக படம் பார்க்க தான் வந்துள்ளோம். நாங்கள் விஜய்க்காக தான் படம் பார்க்க வந்துள்ளோம். விஜய்யை திரையில் பார்த்தாலே போதும். நாங்கள் ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோம்” என்றனர்.

பெங்களூருவில் இருந்து கோட் படம் பார்க்க வந்த ரசிகர் பேசுகையில், “பெங்களூருவில் முதல் காட்சி 6.30க்கு திரையிடப்பட்டது அப்போதும் சென்னையில் கோட் படம் பார்க்க வேண்டும் என வந்துள்ளோம். படம் கண்டிப்பாக மாஸாக இருக்கும்” என்றார். அதேபோல் கோட் படம் பார்க்க வந்த சிறுவர் பேசுகையில், “எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். விஜய் நடித்தாலே நன்றாக இருக்கும். விஜய் டான்ஸ், நடிப்பு எல்லாம் வேற லெவலில் இருந்தது” என்றார். இதனிடையே கோட் திரைப்படம் முதல் காட்சி முடிந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நெல்லை: கோட் பட ரிலீஸை செண்டை மேளத்துடன் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்! - GOAT Movie Celebration

Last Updated : Sep 5, 2024, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details